ஷிரந்தி ராஜபக்சவுக்கு நேரடித் தொடர்பு.. புலிகளின் 220 கிலோ தங்கத்தில் 110 கிலோ தங்கத்தை விற்றுப் பணமாக்கிய ஷிரந்தி ராஜபக்ச..”

இறுதிக்கட்டப் போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து இராணுவத்தினரால் அதிகாரப்பூர்வமாகக் கைப்பற்றப்பட்ட 220 கிலோ தங்கத்தில், பாதிக்கு பாதியான 110 கிலோ தங்கம் நேரடியாகக் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Field Marshal Sarath Fonseka) திடுக்கிடும் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

இலங்கை அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இச் சம்பவம் குறித்து அவர் மேலும் கூறுகையில்;

தான் இராணுவத் தளபதியாகப் பதவி வகித்த காலத்தில் முல்லைத்தீவு உள்ளிட்ட போர்க்களப் பகுதிகளில் விடுதலைப் புலிகளிடமிருந்து 220 கிலோ தங்கம் அதிகாரப்பூர்வமாக மீட்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்டது. எனினும், தான் இராணுவத் தளபதி பதவியிலிருந்து வெளியேறிய பின்னர், 110 கிலோ தங்கம் மட்டுமே கிடைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்திருந்ததைச் சுட்டிக்காட்டிய சரத் பொன்சேகா, எஞ்சிய 110 கிலோ தங்கம் நேரடியாகக் களவாடப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

சட்டவிரோதமான முறையில் போர்க்களத்திலிருந்து மீட்கப்பட்ட இத் தங்கத்தை விற்பனை செய்து பணமாக்கிய பின்னணியில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்சவுக்கு (Shiranthi Rajapaksa) மிக முக்கியப் பங்கு இருப்பதாகவும் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

மேலும், இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுங்கத்துறையில் (Customs Department) ஏற்கனவே உத்தியோகபூர்வமாக முறைப்பாடு அளித்துள்ளதாகவும் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமை, ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராகவும் தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களிலும் மீண்டும் பெரும் பரப்பரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments