தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்றைய தினம்(25) ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளான தனியார் காணிகளை காணி உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்க வேண்டும் எனக் காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

கொட்டும் மழை

இந்நிலையில், நேற்றைய தினம்(24) சனிக்கிழமை ஆரம்பித்த போராட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை வரையில் கொட்டும் மழைக்குள்ளும் இரண்டு நாட்கள் முன்னெடுக்கப்பட்டது.

கொட்டும் மழையிலும் ஓயாத போராட்டம்! 42ஆவது பௌர்ணமியிலும் தையிட்டியில் திரண்ட மக்கள் | Issue Of The Illegal Vihara In Thaiyiddy Protest

குறித்த போராட்டமானது 42ஆவது பௌர்ணமி தினமாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

GalleryGallery

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments