இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்று (25) இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக, பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதன்படி, இரத்தினபுரி, குருவிட்ட, எஹலியகொடை, கிரியெல்ல, அயகம, பெல்மதுளை, பனாவென்ன, காவத்தை மற்றும் ஓப்பநாயக்க உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து பெய்து வரும் மழையினால் களு கங்கை மற்றும் அதன் துணையாறுகளின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், ஆற்றங்கரையோரங்கள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள அபாயம் தொடர்பில் மிகுந்த விழிப்புடனும் அவதானத்துடனும் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

