காதலியை அரிவாளால் வெட்டிக் கொன்று இளைஞன் செய்த செயலால் பரபரப்பு ; பறிபோன உயிர்கள்காதலர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம், ஓசூரில் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஓசூரில் உள்ள பிரபல தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்தப் பணியாளராக வேலை செய்து வந்த இரு காதலர்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

 வாக்குவாதம்

தொடக்கத்தில் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்த இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சிறிது நேரத்தில் முற்றியது.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞன், அறையில் இருந்த அரிவாளை எடுத்து காதலியை சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காதலி உயிரிழந்து கிடப்பதைக் கண்ட இளைஞன் அதிர்ச்சியடைந்ததாக தெரிகிறது. காதலி ரத்த வெள்ளத்தில் இறந்ததை கண்ட இளைஞன் மனம் பதறினார். அய்யோ! காதலியை கொன்று விட்டோமே என்று கதறி அழுதபடியே அறையை விட்டு வெளியே ஓடி வந்தார்.

அங்கு ஓசூர் – பாகலூர் சாலையில் அந்த வழியாகச் சென்ற லாரியின் முன்பு பாய்ந்து மோதி தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார்.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள், பிரதீப்பை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி பஉயிரிழந்தார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments