யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த சுமார் 20 வயதுடைய இளம் பெண் ஒருவர் திடீரெனக் காணாமல்போயுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகளைப் பிரிந்து தவிக்கும் அந்தத் தாய், கடந்த 22 நாட்களாகத் தன் தேடித் தினசரி அலைந்து வருகிறார்.

உறவினர்களின் கூற்றுப்படி, குறித்த இளம் பெண் இறுதியாக யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் காணப்பட்டுள்ளார். அதன் பின்னர் அவர் எங்கு சென்றார், என்பது குறித்த எந்தவொரு தகவலும் கிடைக்காமல் தாயின் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தனது ஒரே மகளைக் கண்டுபிடித்துத் தருமாறு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு 22 நாட்கள் கடந்துவிட்ட போதிலும், இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என அத்தாய் கண்ணீருடன் கதறுகிறார். பெற்ற தாயின் இந்தத் தவிப்பு காண்போரின் நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது.

இது குறித்து எவரேனும் தகவல் அறிந்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது கீழே உள்ள இலக்கத்திற்கோ தொடர்பு கொண்டு உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்( யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தின் தொலைபேசி இலக்கம்

+94 213 211 258 ).

முடிந்தவரை இச்செய்தியைப் பகிர்ந்து, இந்தத் தாய் தன் மகளுடன் இணைய உதவுங்கள்

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments