அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் திங்கட்கிழமை (26) காலை இடம்பெற்றுள்ளது.

தமிழர் பகுதியில் மின்கம்பியைச் சீரமைக்கச் சென்றவருக்கு நேர்ந்த பெரும் துயரம் | Tragedy Strikes Man Repairing An Electric Wire

உயிரிழந்தவர் அட்டாளைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

தென்னந்தோப்பில் மின்கம்பியைச் சீரமைக்கச் சென்றபோது மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments