ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் டோலிடோ மாகாணத்தில் உள்ள உர்டா (Urda) அருகே இன்று (28) காலை இரண்டு அதிவேக ரயில்கள் மோதிய கோர விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 பலி எண்ணிக்கை மேலும் உயரலாம்

179 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

மாட்ரிட்–செவில்லே வழித்தடத்தில் பயணித்த ரென்ஃபே (Renfe) மற்றும் இரியோ (Iryo) நிறுவனங்களின் ரயில்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளன. மோதலைத் தொடர்ந்து ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டு சரிவுப் பகுதியில் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தைத் தொடர்ந்து மாட்ரிட், சியுடாட் ரியல் மற்றும் அண்டலூசியா இடையிலான அதிவேக ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments