தங்காலை – உனாகூருவ கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த இரு இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், மற்றைய இளைஞர் காணாமல் போயுள்ளார்.
உயிரிழந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் உனாகூருவ பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் எனவும், காணாமல் போயுள்ளவர் கிரிந்த பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
