சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், 24 கேரட் தங்கத்தால் உருவாக்கப்படும் நடைபாதையை இந்த ஆண்டு இறுதிக்குள் திறக்க துபாய் திட்டமிட்டுள்ளது.

உலகிலேயே முதல் முறையாகவும், மிக நீளமான தங்க நடைபாதையாகவும் இது அமையும் என துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட் தெரிவித்துள்ளது.

தங்கத்துடன் நீண்டகாலமாகத் தொடர்புடைய துபாய்

தங்கத்துடன் நீண்டகாலமாகத் தொடர்புடைய துபாய் நகரின் வர்த்தக அடையாளத்தை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக இந்த நடைபாதை திட்டம் பார்க்கப்படுகிறது.

இந்த நடைபாதை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் திறக்கப்படும் என துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட்டின் வணிகப் பிரிவு மூத்த இயக்குநர் ரஷித் அல் ஹர்மூதி தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்குவதுடன், உலகளாவிய தங்க வர்த்தக மையமாகவும், சுற்றுலாத் தலமாகவும் துபாயின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

  துபாயின் டெய்ரா பகுதியில் அமைந்துள்ள துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட், தங்க வர்த்தகம், நகை விற்பனை மற்றும் சுற்றுலா அனுபவங்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் நோக்கில் கடந்த ஜனவரி 2026-ல் தொடங்கப்பட்டது.

துபாய் மீடியா அலுவலகத்தின் தகவலின்படி, இந்தப் பகுதியில் தங்கம், நகைகள், வாசனைத் திரவியங்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாழ்க்கைமுறை சார்ந்த பொருட்களை விற்பனை செய்யும் 1,000-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments