பல்லேகலை – தும்பறை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதி ஒருவர், சிறைச்சாலை அதிகாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இன்று (1) பிற்பகல் உயிரிழந்துள்ளார்.

சிறைச்சாலை மதிலை ஒட்டியுள்ள பாதுகாப்பு சாவடிக்கு (Watchtower) ஏறிய குறித்த கைதி, அங்கு கடமையிலிருந்த சிறைச்சாலை அதிகாரியின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பள்ளேதென்ன தெரிவித்துள்ளார்.

தும்பறை சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதி சுட்டுக்கொலை | Prisoner Shot Dead While Attempting Escape Prison

இதன்போது தப்பிச் செல்ல முயன்ற கைதியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர் தும்பறை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் என்பதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments