ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக செவ்வாய் கருதப்படுகிறார். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான இவர், 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.

தற்போது கடக ராசியில் பயணிக்கும் செவ்வாய், நவம்பர் 12 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைகிறார். சிம்ம ராசியின் அதிபதி சூரியன்.

சிம்ம ராசிக்குள் நுழையும் செவ்வாய்: நவம்பர் 12 முதல் சவால்களைச் சந்திக்கப்போகும் ராசிகள்! | Mars Transit In Leo On 12 November Who Get Issues

ஜோதிடத்தின்படி, சூரியனும் செவ்வாயும் நட்பு கிரகங்கள் என்பதால், இந்தப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும், சிலருக்கு சவால்களையும் ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், நவம்பர் 12 ஆம் தேதி நிகழும் இந்த செவ்வாய் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் நிதி மற்றும் தொழில் விடயத்தில் கூடுதல்  கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கன்னி

சிம்ம ராசிக்குள் நுழையும் செவ்வாய்: நவம்பர் 12 முதல் சவால்களைச் சந்திக்கப்போகும் ராசிகள்! | Mars Transit In Leo On 12 November Who Get Issues

கன்னி ராசியின் 12ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்வதால், பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அவசரமாக முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. இல்லாவிடில் பெரியளவில் நிதி இழப்பு ஏற்படலாம். 

வெளிநாட்டு வணிகம் செய்பவர்கள் முடிவுகளை நிதானமாக எடுக்க வேண்டும். திருமணமானவர்கள் உறவுகளில் பிரச்சனைகளைச் சந்திக்கலாம்.

தனிப்பட்ட வாழ்க்கையில் மூன்றாம் நபரின் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். உங்கள் தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதையும் தவிர்ப்பது நல்லது.

மகரம்

சிம்ம ராசிக்குள் நுழையும் செவ்வாய்: நவம்பர் 12 முதல் சவால்களைச் சந்திக்கப்போகும் ராசிகள்! | Mars Transit In Leo On 12 November Who Get Issues

மகர ராசியின் 8ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்வதால், வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் புறக்கணிக்காதீர்கள்.

கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்; இல்லாவிட்டால் உறவுகளில் விரிசல் ஏற்படலாம். வேலை தேடுபவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.

பணிபுரிபவர்கள் அலுவலக அரசியலில் இருந்து விலகி இருப்பது நல்லது. இல்லாவிட்டால் நற்பெயர் பாதிக்கப்படலாம்.குறிப்பாக புதிய வீடு வாகனம் வாங்குவதை தள்ளிப்போடுவதால் இழப்பை தவிர்க்கலாம்.

மீனம்

சிம்ம ராசிக்குள் நுழையும் செவ்வாய்: நவம்பர் 12 முதல் சவால்களைச் சந்திக்கப்போகும் ராசிகள்! | Mars Transit In Leo On 12 November Who Get Issues

மீன ராசியின் 6ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்வதால், பணியிடத்தில் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மற்றவர்களை அளவுக்கு அதிகமாக நம்புவதைத் தவிர்க்கவும். மாணவர்களுக்குப் படிப்பில் கவனம் குறையலாம். தவறான நட்புகளைத் தவிர்த்து, கவனத்தை மேம்படுத்த யோகா, தியானம் போன்றவற்றைச் செய்யுங்கள். சிலருக்கு செரிமானம் அல்லது இதயம் தொடர்பான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).          

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments