திருகோணமலை, சீன துறைமுகப் பகுதிக்குட்பட்ட கப்பல்துறை வீதியில் பயணித்த முச்சக்கர வண்டியொன்றின் மீது இன்று (02) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குறித்த மூவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
