ஓமன் கடற்கரைக்கு அப்பால், இந்தியக் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சென்ற அந்தக் கப்பல், ஓமன் கடற்கரைக்கு அருகில் சென்றுகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வான்வழிப் பொருள் ஒன்றால் தாக்கப்பட்டதாக இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்தார்.

‘எம்எஸ்வி அல் ஜுசுஃபி’ (MSV Al Jusufi) என்று அடையாளம் காணப்பட்ட அந்த கப்பல் திங்கட்கிழமை (02) தாக்குதலுக்கு உள்ளானதாக அமைச்சர் தெரிவித்தார். 

கப்பலில் இருந்த பதின்மூன்று பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, ஓமன் நாட்டு கடலோரக் காவல்படையினரால் மீட்கப்பட்டனர். 

இருப்பினும், குஜராத்தைச் சேர்ந்த கந்தர் நஹிம் அஜிஜ் என்ற மாலுமி, காயங்கள் காரணமாக உயிரிழந்தார்.

அமெரிக்க-ஈரான் போர் மற்றும் சவூதி அரேபியா மீதான ஹூதிகளின் தாக்குதல்கள் இருந்தபோதிலும், இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் மீதான தாக்குதல்கள் ஒப்பீட்டளவில் அரிதாகவே உள்ளன. 

இருப்பினும், வளைகுடாப் பகுதியைச் சுற்றியுள்ள முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் நிலவும் மோதல்கள், இந்திய மாலுமிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட அரசு புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு பெப்ரவரியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து, குறைந்தது 22 இந்தியக் குடிமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

இவர்களில் 14 பேர் கடல் பணியாளர்கள் ஆவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments