யாழ்ப்பாணம், வேலணை – செட்டிக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சகோதரன் மற்றும் சகோதரி ஆகிய இருவரின் சடலங்களும் இன்று (06) மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் 74 வயதுடைய முத்துலிங்கம் புவனேஸ்வரி மற்றும் 73 வயதுடைய சுப்பிரமணியம் பாலசுந்தரம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வீட்டைச் சோதனையிட்டபோது, ஆண் வீட்டுக்கு வெளியே உயிரிழந்த நிலையில் காணப்பட்டதுடன், பெண் வீட்டுக்குள் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

பெண்ணின் சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளதாகவும், ஆண் உயிரிழந்து சுமார் 48 மணித்தியாலங்கள் கடந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குறித்த இருவருடன் மாற்றுத்திறனாளிப் பெண்ணொருவரும் அதே வீட்டில் வசித்து வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் பதிவுப் பணிகளுக்காக குறித்த வீட்டிற்குச் சென்ற கிராம சேவகர், இருவரையும் விசாரித்துள்ளார்.

இதன்போது, அவர்கள் வீட்டுக்குள் உறங்குவதாக மாற்றுத்திறனாளிப் பெண் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

யாழில் வீட்டிலிருந்து வீசிய துர்நாற்றம் ; ஒரே வீட்டிலிருந்து சகோதரன், சகோதரியின் சடலங்கள் மீட்பு | Two Bodies Recovered From The Same House In Jaffna

இச்சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்த இருவரினதும் சடலங்கள் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளன.

இருவரின் மரணத்திற்கான காரணம் மற்றும் சம்பவம் பணத்தை கொள்ளை அடிக்கும் விசமிகளின் வேலையாகயிருக்கலாம் என சந்தேகம் மேலதிக விபரங்கள் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னரே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments