தூக்கிட்டு உயிர் மாய்த்த இளம் குடும்பபெண் ; தாயின் காலடியில் இரவு முழுதும் 3 வயது மகன் செய்த செயல் மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் தாயொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் அவரது 3 வயது மகன் தற்கொலை செய்த தாயின் காலை பிடித்து கதறி அழுத குழந்தை நாற்காலியில் மயங்கி கீழே விழுந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், குடும்பச் சண்டைகள் காரணமாக, குறித்த இளம் தாய் கடந்த ஒரு வருடமாகத் தன் கணவரைப் பிரிந்து தனது சொந்த ஊரில் வசித்து வந்தார்.

தூக்கிட்டு உயிர் மாய்த்த இளம் குடும்பபெண் ; தாயின் காலடியில் இரவு முழுதும் 3 வயது மகன் செய்த செயல் | Son Stays By Dead Mother Whole Night

தற்கொலை

இந்நிலையில், தனது தாய் இல்லாத சந்தர்ப்பத்தில் தனது படுக்கையறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

குழந்தை தற்கொலை செய்த தாயின் காலை பிடித்து இரவு முழுவதும் கதறி அழுது மயங்கி சரிந்து விழுந்துள்ளார்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தபோது, கதவுகளை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, மின்விசிறியில் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததைக் கண்டனர். இதற்கிடையில், தற்கொலைக்கு பயன்படுத்தப்பட்ட நாற்காலியில் குழந்தை சுயநினைவின்றி கிடந்தது.

ஆரம்பத்தில், குழந்தையும் இறந்துவிட்டதாக பொலிஸார் நினைத்தனர். ஆனால் அவர்கள் குழந்தையை பலமாகத் தட்டியபோது கதறி அழுதுள்ளார்.  

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments