கிளிநொச்சி, சாந்தபுரம் பகுதியில் யுவதி ஒருவரை கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய கொடூர சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட யுவதி உடனடி மருத்துவ சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யுவதி கூட்டுப் பாலியல் வன்புணர்வு; தமிழர் பகுதியில் தொடரும் பயங்கரம் | Young Woman Gang Raped In Kilinochchi

உடனடியாகச் செயற்பட்ட கிளிநொச்சி பொலிஸார் 

சாந்தபுரம் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் உடனடியாகச் செயற்பட்ட கிளிநொச்சி பொலிஸார், தீவிர விசாரணைகளை மேற்கொண்டு குறித்த நான்கு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை   முன்னெடுத்து வருவதாக  தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments