சவூதி அரேபியாவில் இரண்டு வருடங்களுக்கும் மேலாகப் பணிபுரிந்துவிட்டு, பெரும் கனவுகளுடன் தாயகம் திரும்பிய 33 வயதுடைய தமிழ்ப் பெண்ணொருவர் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் திட்டமிட்டுக் கடத்தப்பட்டு, துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நண்பியின் பொதியை (பார்சல்) ஒப்படைப்பதற்காகச் சென்ற இப்பெண், வாடகை வாகனச் சாரதி மற்றும் அவரோடு இணைந்த கும்பலால் போதைப்பானம் கொடுக்கப்பட்டு மயக்கமடைந்த நிலையிலேயே துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டில் இருந்து முல்லைத்தீவுக்கு சென்ற தமிழ் பெண் துஸ்பிரயோகம்! சம்பவத்தால் ஷாக் | Tamil Diaspora Woman Sexually Abused In Mullaitivu

போதைப்பானம் கொடுத்து துஸ்பிரயோகம்

அத்தோடு அவரிடமிருந்த 13 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான நகைகளும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட பின்னர், குறித்த பெண் தவறான முறையில் நடத்தப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அருகில் வீசப்பட்டுள்ளார்.

மயக்கமடைந்த நிலையில் இருந்த குறித்த பெண், காவல்துறையினரால் மீட்கப்பட்டுத் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் நினைவு திரும்பியதைத் தொடர்ந்து வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் வழிகாட்டலில் முல்லைத்தீவு காவல்துறையினர் குற்றவாளிகளைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம், வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும், அறிமுகமில்லாத வாகனங்களில் பயணிப்பதில் உள்ள பேராபத்துகள் குறித்தும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments