ஈரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பகாயி (Esmaeil Baghaei) இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடல் முற்றுகை

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

இத்தகைய சூழ்நிலைகளில் சர்வதேச சட்டத்தின் 51 ஆவது பிரிவின் கீழ் ஒரு நாடு தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கு எந்தவொரு வழியையும் பயன்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் கடல் முற்றுகைக்கு எதிராக இராணுவ நடவடிக்கை: ஈரானின் அதிரடி அறிவிப்பு | Iran Defends Force To End Us Naval Blockade

கடல் முற்றுகையை முறியடிப்பது தொடர்பான தீர்மானங்கள் நாட்டின் உயர்மட்டத்திலேயே எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு சூழ்நிலைக்கு ஏற்ப இராஜதந்திர மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மற்றும் நடைமுறை நடவடிக்கைகளை எடுப்பதற்கான முடிவை ஈரானிய அதிகாரிகள் மேற்கொள்வார்கள் எனவும்அவர் தெரிவித்துள்ளார்.

விதிக்கப்பட்டுள்ள தடை

ஈரான் மீது பல மாதங்களாக விதிக்கப்பட்டுள்ள தடைகளும் முன்னர் விதிக்கப்பட்ட தடைகளும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவின் கடல் முற்றுகைக்கு எதிராக இராணுவ நடவடிக்கை: ஈரானின் அதிரடி அறிவிப்பு | Iran Defends Force To End Us Naval Blockade

அததோடு இது அமெரிக்க – சியோனிச இராணுவ ஆக்கிரமிப்பின் தொடர்ச்சி எனவும் சர்வதேச சட்ட சாசனத்தின் நான்காவது பிரிவை மீறும் செயல் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

Advertisement

இந்தநிலையில் அமெரிக்காவின் கடற்படை முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடைகள் தீவிரமடைந்துள்ளதன் அடிப்படையில் தமது தற்காப்பு உரிமையை வலியுறுத்தித், தேவைப்படின் இராணுவ நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தயங்கப் போவதில்லை என்பதை ஈரான் சர்வதேச சட்டப் பிரிவுகளை மேற்கோள்காட்டித் தெளிவுபடுத்தியுள்ளதை இதன் மூலம் தெளிவாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments