கனகபுரம் துயிலும் இல்லத்தில் பொலிஸார் கடுமையான அடாவடித்தனத்துடன் நடந்துகொண்டதாக, கிளிநொச்சி மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின்  உறுப்பினரும், பணிக்குழு உறுப்பினருமான கு. குணரச் (ஞானம்) குற்றம் சாட்டியுள்ளார்.

லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கனகபுரம் துயிலும் இல்லத்தில் பரபரப்பு

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கனகபுரம் துயிலும் இல்லத்திற்கு வந்த பொலிஸார், தாங்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்குவதாகக் கூறி, அருகிலிருந்த போக்குவரத்துப் பொலிஸாரை அழைத்து, இவர்கள் போக்குவரத்திற்குத் தடையாகச் செயற்படுகின்றனர் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.

அதன் பின்னர், கனகபுரம் துயிலும் இல்லத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த 8 பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் மாவீரர் தினத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்குப் பயன்படுத்திய வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், பொலிஸாரின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறிய சில அரசியல் தலைவர்கள்கூட மௌனம் காப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெறும். அதற்கு எவ்வளவு தடைகள் வந்தாலும் அவற்றை எதிர்கொள்வதற்குத் தயாராக இருக்கின்றோம் என்றார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments