கடந்த ஆண்டு இலங்கையில் இருந்து கனடா சென்றோர் எண்ணிக்கை மிக அதிகம் என்றே சொல்ல வேணடும், அதிலும் விசிட்டர் விசாவில் யாழ்ப்பாணம் உட்பட வட ப்குதியில் இருந்து பலர் கனடா சென்றுள்ளனர்.

இந்நிலையில் கனடாவுக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள், சர்வதேச மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை முன்னெப்போதும் இல்லாத அளவில் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மில்லியன் கணக்கான வீசாக்களை நிராகரித்த கனடா ; இலங்கை தமிழர்களின் நிலை என்ன? | Canada Rejects Millions Of Visas In 2024

மில்லியன் கணக்கான தற்காலிக வீசா   நிராகரிப்பு

2024 ஆம் ஆண்டு மில்லியன் கணக்கான தற்காலிக வீசா விண்ணப்பங்களை கனடா நிராகரித்துள்ளது. மொத்தமாக 2.35 மில்லியன் தற்காலிக விசாக்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது முந்தைய ஆண்டை விட 1.8 மில்லியன் நிராகரிப்புகள் அல்லது 35 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது. விசிட்டர் விசாக்கள் மிகக் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மில்லியன் கணக்கான வீசாக்களை நிராகரித்த கனடா ; இலங்கை தமிழர்களின் நிலை என்ன? | Canada Rejects Millions Of Visas In 2024

54 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. சர்வதேச ரீதியில் கோவிட் தொற்று பரவலின் பின்னர் அதிகரித்து வரும் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையால் வீடுகள், சுகாதாரம் மற்றும் பொதுச் சேவைகள் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது.

இந்த அழுத்தத்தை குறைப்பதற்காகவே வீசாக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு காரணமாக கூறப்படுகின்றது.

நிராகரிக்கப்பட்ட 2.35 மில்லியன் விசாக்களில் 1.95 மில்லியன் விசாக்கள் பயண விசாக்கள் ஆகும். அத்துடன், ஆய்வு அனுமதி மற்றும் பணி அனுமதி விசாக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மில்லியன் கணக்கான வீசாக்களை நிராகரித்த கனடா ; இலங்கை தமிழர்களின் நிலை என்ன? | Canada Rejects Millions Of Visas In 2024

கனடாவிற்கு புலம்பெயர முயற்சிப்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கனடா தனது குடிவரவு விதிகளை கடுமையாக்கி வருகிறது. வளங்களை சிறப்பாக நிர்வகிப்பதற்காகவும் அவற்றை பாதுகாப்பதற்காகவும் கனேடிய அரசாங்கம் இந்த மாற்றங்களை செய்து வருகிறது.

இலங்கை மாணவர்களை அழைக்கும் சிங்கப்பூர்!

இந்த மாற்றங்கள் வீட்டுவசதி மற்றும் சுகாதாரத்தின் மீதான அழுத்தத்தை குறைக்கும் அதேவேளை , கனேடிய அரசாங்கத்தில் இந்த நடவடிக்கையால் பல்வேறு தொழில்களில் தொழிலாளர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *