இனவாதமின்றி நாட்டை கட்டியெழுப்புவோம் என ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) உண்மை முகம் தற்போது அம்பலமாகியுள்ளது.

காரணம், மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) அராங்கமானது மே 19 ஆம் திகதியை யுத்த வெற்றி வீரர்கள் நாள் என பிரகடனப்படுத்திய நிலையில் அந்நாளை அநுர அரசாங்கம் கட்சிதமாக போர் வீரர்கள் தினமென கூறி அனுஷ்டித்துள்ளனர்.

ஒரு புறம் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்கள் யுத்தத்தினால் இலட்சக்கணக்கில் உயிர்களை தொலைத்து வலியில் துடிக்கும் போது இன்னொரு புறம் இவ்வாறான ஒரு செயற்பாடு முன்னெடுக்கப்படுவது என்பது நாட்டில் இனவாதம் தலைதூக்கி இருப்பதை வெளிப்படையாக காட்டுகின்றது.

வாக்குக்காக மேடையில் தமிழ் மக்கள் வேதனைகளை வைத்து காய் நகர்த்திய அநுர, ஆட்சி பீடம் ஏறியதும் இவ்வாறு நடத்துகொள்வது என்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் தரப்பை பொறுத்த வரையில் தற்போது மக்கள் யுத்தம் கோரவில்லை, யுத்ததினால் இழந்த உறவுகளுக்கு நீதிதான் கோருகின்றனர்.

இருப்பினும் அது தொடர்பில் அரசு ஒரு தரப்பினருக்கு வாய்த்திறக்காத நிலையில், இவ்வாறு மற்றுமொரு தரப்பினருக்கு சாதகமான நடவடிக்கைகளை எடுப்பது என்பது பாதிக்கப்பட்ட மக்களை ஏறி மிதிக்கும் ஒரு விடயமாக அல்லவா உள்ளது.

ஒரு நாடு, ஒரு மக்கள் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வாக்குக்காக சித்தரித்த போலி கருத்துக்கள் தற்போது உடைக்கப்பட்டுள்ளதுடன் தமிழ் மக்களுக்கு அரசாங்கம் மீதான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பிலும், அநுர அரசாங்கத்தின் எதிர்காலம், தமிழ் மக்களின் அரசியல் மற்றும் பலதரப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய செய்திக்கு அப்பால் நிகழ்ச்சி,   

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments