பாகம் மூன்றின் பதிலாவதுதொடர்

ஒரு நாள் நடந்து திருமலையில் உள்ள ஒரு கிராமத்தை வந்து அடைந்தோம். அங்கே கடுமையான வறுமை நிலை காணப்பட்டது. குறிப்பாக அவர்கள் எங்களிற்கு சமைப்பதற்கு கடுமையான கஷ்டத்தை எதிர் நோக்கியதை எங்களால் காணக்கூடியவாறு இருந்தது. அப்பொழுது எங்களோடு வந்தவர்களிடம் குறிப்பிட்ட சிலரிடம் பணம் இருந்தது. அது துணைப் படையினரிடம் இருந்து எடுத்தபணம் . அதனால் ஒரு போராளி சொன்னார் நீங்கள் கடையைக் காட்டுங்கோ நாங்கள் தேவையான பொருட்களை வாங்கித் தருகிறோம் எனச் சொல்லி அவரோடு கடைக்கு சென்றார். ஒரு மணித்தியாலம் கழித்து ஒரு மாதத்திற்கு உரிய சாமானோடு இருவரும் வந்தார்கள்.

  சாமான்கள் மாட்டு வண்டிலில் வந்து இறக்கப் பட்டது. அங்கே இருந்தே ஒரு போராளி இது பற்றி குறிப்பிடும் போது ஒவ்வொரு தடவையும் மட்டுநகரில் இருந்து யாழ் செல்லும் போது இப்படியான உதவிகள் தங்களிற்கு தொடர்ச்சியாக செய்வதாக எங்களிடம் அவர் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து சமைத்து எல்லோரும் சாப்பிட்டோம். ஆனால் திருகோணமலையில் எல்லா இடங்கலிலும் இந்திய இராணுவம் நிலை கொண்டேயிருந்தது. மட்டக்களப்பில் இருந்து மட்டுமே வேளைக்கு வெளியேறி திருமலையில் கவனமாக   இருந்தார்கள்.அதனால் “அவர்களோடு சண்டையிடாமல் அவதானமாக நீங்கள் போக வேண்டும்” என்று அங்குள்ள போராளி எங்களிற்கு புத்திமதி சொன்னார்.

இரண்டு நாள் இரவு பகலாக நடந்து அடுத்த முகாமிற்குச்  சென்றோம். அங்கே எங்கள் எல்லோருக்கும் கஞ்சியும், ரீயும் போட்டு வைத்திருந்தார்கள்.  அதைக் குடித்தோம் எங்களின் பசி ஆறியது. பின்னர் பகல் முழுமையாக அங்கே தூங்கினோம். இரவு ஆறு மணிக்கு எங்களின் நடைப்  பயணம் தொடக்கியது. இரவு பகலாக இரண்டு நாள் நடந்து அடுத்த முகாமை சென்றடைந்தோம். அங்கே எங்களுக்காக  ஆடு வாங்கி வைத்து இருந்தார்கள். ஆனால் எங்களோடு நான்கு முஸ்லிம் போராளிகளும் வந்தார்கள்.  அதில் வந்த சத்தார் / மற்றும் ராவிக் இருவரையும் கூட்டிக்கொண்டு அவர்களின் மத நம்பிக்கைக்கு ஏற்ப அவர்களாலே அந்த ஆடு வெட்டப்பட்டு சமைக்கப்பட்டது. சமையல் முடிய எல்லோரும் சாப்பிட்டோம்.

தொடர்ந்து அன்றைய பகல் அங்கே ஓய்வாக இருந்தோம். இரவு ஆறு மணிக்கு நடக்கத் தொடங்கியதும். மாரிமழை கடுமையாகப் பெய்ய தொடங்கியது. இரவு பகலாக மழை பெய்து கொண்டே இருந்தது. ஆனால் நாங்களும் நடந்து கொண்டே இருந்தோம்.தொடர்ந்து நடக்கத் தொடங்கி நல்லதண்ணி ஆறு கடலில் கலக்கும் இவ்விடம் மூதூரைச் சேர்ந்த இறால்குழி என எங்களிடம் அவர்கள் சொன்னார்கள்.சென்றதும் கடற்கரை நல்ல தண்ணியாக இருந்ததால் அதில் குளிப்பதற்கு போராளிகள் விரும்பினார்கள். பொறுப்பாளர்  லோறன்ஸ்சிடம் கேட்டார்கள். அவர் அதை அனுமதிக்கவில்லை ஏனெனில் இந்திய” இராணுவம் எம்மீது தாக்குதல் நடத்தலாம்” என எமக்கு தெளிவுபடுத்தினார்.

அங்கிருந்து ஒரு நாள் நடந்து புலேந்தி அம்மான் முகாமிற்குச் சென்றோம்.  அந்த முகாமில் தான் விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட சிறப்புத்தளபதி பதுமன் அவர்கள் நின்றார்.நாங்கள்  அங்கே சென்றதும்   எங்களுடைய ஆயுதங்களை திரு. பதுமன் அவர்கள் ஒவ்வொன்றாகப்  பார்வையிட்டார். அப்பொழுது அவரிடம் ஆயுதம் பற்றாக் குறையாகயிருந்ததை எங்களால் அறியக்கூடியவாறு இருந்தது. இரண்டு நாள் அங்கே நின்றோம். இரண்டாவது நாள் பதுமன் எங்களோடு கதைத்தார்..நீங்கள் நல்ல ஆயுதங்களோடு வந்திருக்கின்றீர்கள். எங்கள் மாவட்டத்தில் ஆயுதம் பற்றாக் குறையாக உள்ளது. நீங்கள்  இராணுவத்தோடு சண்டையிட்டு சிறிய தொகை ஆயுதம் எடுத்துத் தந்து விட்டு தலைவரிடம் போகுமாறு எங்களிடம் கேட்டார். எங்களின் பொறுப்பாளர் லோறன்ஸ் அவர்களும் அதை ஏற்றுக் கொண்டார்.

இங்கே ஒரு இந்திய இராணுவத்தினுடைய  றக் முன்னால் போகும் அதை தொடர்ந்து 50வது இந்திய இராணுவம் றோந்து செல்லும். இது வழமையாக காலை 6 மணியில் இருந்து 8 மணிக்குள் நடக்கும். நீங்கள் பதுங்கித் தாக்குதல் செய்வதன் மூலமாக அவர்களின் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பின்வாங்குவது தான் எங்களின் நோக்கம் என எங்களிற்கு அவர் விளக்கப்படுத்தினார். அதன் பின் என்ன நடத்தது .அடுத்த நாள் காலை 4 மணி பிற்பகல் விடிகாலை எங்களில் 50 பேர் அவர்களில் 25 பேர் மொத்தம் 75 போராளிகள்   25 மீற்றர் இடைவெளியில் றோட்டில் இருந்து 50 மீற்றர் தூரத்தில்  விடப்பட்டோம். பொது மக்களிற்கு தெரியாதவாறு மறைப்பான இடங்களில் சுடுவதற்கு நிலை எடுத்தவாறிருத்தோம்.  அன்றையிலிருந்து பதுமனால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களான மேஜர். சங்கர்,  மற்றும் வாய்சன் இருவரும் பொறுப்பாகயிருந்தார்கள். 

அவர்களின் கட்டளையிலே சண்டையிடுவதற்கு  தயாராகயிருந்தோம். அவர்கள் எங்களிடம் சொன்னதுபோல் இந்திய ஆமியின் ஜீப் எங்களைக் கடந்துபோனது. 10 நிமிடத்தால் இராணுவம் வரும் என எதிர்பார்த்திருக்கின்றோம். திடிரென தளபதி பதுமன் அவர்கள் மேஜர் சங்கரைத் தொடர்பு கொண்டு சண்டைபிடிக்க வேண்டாம் உடனடியாக ஆட்களைக் கூட்டிக்கொண்டு  முகாம்

வருமாறு கட்டளையிட்டார். அறிவித்தலைத் தொடர்ந்து  வேகமாக அனைவரும் ஓடி காடுகளிற்குள் மறைந்து  முகாமிற்குச் சென்றடைந்தோம். அங்கே சென்றதும்” உங்களை சண்டைக்கு விட வேண்டாம் எனவும்” உடனே தன்னிடம் அனுப்புமாறும் அதை தலைவர் தன்னிடம் சொன்னதாக எங்களிடம் தெரியப்படுத்தினார்.

தொடர்ந்து சங்கர் , வாய்சன் இருவரின் தலமையில் மணலாற்றுக் காட்டை நோக்கி நடக்கத் தொடங்கினோம். சில குறிப்பிட்ட நாட்கள் நடந்து தென்னமரவாடியைக்  கடந்தோம். அது தமிழர்களின் பாரம்பரிய கிராமம் . ஆதித்தமிழர்கள் வாழ்ந்தற்கான சான்றும் அங்கேதான் உள்ளது.  அழகான வயல்வெளிகளும் காடுகளுமாக காட்சி அளித்தது. சில குறிப்பிட்ட  மணித்தியாலம் சென்று எழுச்சிப் பாதை என்ற இடத்தை சென்றடைந்தோம்.  இந்தப் பெயர் விடுதலை புலிகளால்தான் வைக்கப்பட்டது. காரணம் எழுச்சி என்றால் சந்தோசம் இலக்கை அடைந்து விட்டோம் என்பது தான் அதன் பொருள். மாரிகாலம் என்பதால் கடும் மழையினால் காட்டாத்து வெள்ளம் ஓடியவாறு இருந்தது.

  கயிற்றை அருவிக்கு மேலால் கட்டி கயிற்றைப் பிடித்து அனைவரும் அருவியைக் கடந்தோம். அதில் இருந்து சுமார் ஒரு நாள் நடந்தோம். கடுமையான களைப்பாகவிருந்தது. முன்னே மேஜர் சங்கர் நடக்க நாங்கள் அவரைப்பின் தொடர்ந்து நடந்தோம். அடர்த்தியான மணலாற்றுக்காடு எங்களை வரவேற்றது.  சிறிது நேரத்தில் தலைவரைச் சந்திப்போம் என்று எங்களோடு வந்த சங்கர் அண்ணை சொன்னார். அங்கே முகாமிற்குள் உள்நுழைந்ததும்  நடக்கத் தொடங்கினோம்.  15/11/1989 உதய பீடத்தை  வந்து சேர்ந்தோம். இதுதான்  உதயபீடம் என்று சங்கர் அவர்கள் சொன்னார். பின்னர் ஜீவன் என்று பெயர் மாற்றப்பட்டது. அக்காலப் பகுதியில் வீரச்சாவு அடையும் போராளிகளை தாங்கள் வாழும் பாசறைகளில் இருக்கும் பயிற்சி மைதானங்களில் போராளிகளின் வித்துடல்களை விதைத்துக் கல்லறை கட்டி வைக்கும் பழக்கம் அவர்களிடம் இருந்தது. காலையில் எழுந்து  பின் அவ்விடம் சென்று கல்லறைகளிற்கு அஞ்சலி செலுத்தியபின் சத்தியப்பிரமானம் செய்து காலைப் பயிற்சிகளில் ஈடுபடுவது அவர்களின் வழமையான செயற்பாடாகயிருந்தது.


அவ்வகையில் நிறையக் கல்லறைகள் உதயபீட  மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்தது, எங்களைக் கொண்டுபோய் மாவீரர் கல்லறைகள் இருக்கும் மைதானத்தில் இருத்தினார்கள். ஐம்பது பேரும் அதில் இருந்தோம்.  எங்களின் ஆயுதங்களை மேலே பார்த்தவாறு வைத்திருக்குமாறு சங்கர் அண்ணன் எங்களிடம் சொன்னார்.

சிறிது நேரம் நாங்கள் அதில் இருந்தோம் முன்னால் சொர்ணம் அண்ணை அலட் பொய்சனில் வர பின்னால் மூவர் மற்றும் நடுவில் ஒரு அரைக் காற்சட்டை போட்ட ஒரு கட்டையர் வந்து கொண்டேயிருந்தார். பொடியள்  எல்லாம் பார்த்து சொர்ணம் அண்ணனயைத் தான் தலைவர் என்று சொன்னார்கள். அங்கே வந்த தலைவர் ஒரு மரக்கதிரையில் இருந்தபடி எங்களோடு  கதைக்கத்  தொடங்கினார். மறகா எப்படி என மட்டுநகர்ப் பாசையில் தனது கதையை ஆரம்பித்தார். முதலில் துணைப் படையினருடன் நடந்த சண்டையைப் பற்றி கேட்டறிந்தார். அடுத்து உங்களின் அடிப்படைப் பயிற்சி எப்படி நடந்தது உங்களிற்கு அடி விழுந்திருக்காது என தலைவர் சொன்னதும் 

எங்களோடு வந்த பிறேம் என்ற போராளி முன்னே எழும்பி வந்து தலைவரிடம் தனது சேட்டைக் கழட்டி தனது முதுகைக் காட்டினான். 
முதுகுப்பகுதி பெரிதாக வெடித்திருந்தது  அதைப்பார்த்த தலைவர் “யார் அடித்தது?என கேட்டார். அதற்கு பிறேம் செந்தில் மாஸ்ட்டர் அடித்தவர் எனப் பதில் அழித்தார். கண்டிப்பாக அவருக்குத் தண்டனை வழக்கப்படும் எனச் சொல்லிவிட்டு யாழில் “அசோகா” ஹோட்டலில் முகாம் இட்டிருக்கும் துணைப்  படையினரைத் தாக்கவேண்டும். அதற்கான மாதிரிப் பயிற்சி  நடந்து கொண்டிருப்பதாகவும்  “அதில் நீங்களும் இணைந்து பயிற்சி  எடுக்க வேண்டும்”! என்றும் தலைவர் எங்களிடம் குறிப்பிட்டார். அடுத்து தலைவர் எங்களிடம் இருந்து விடை பெற்றார். பின்னர் நான் கூட்டி வந்த  துணைப்படையைச் சேர்ந்தே ராஜா என்பவரை உதயபீட முகாம் பொறுப்பாளரான மேஜர் அரவிந்தண்ணையிடம் ஒப்படைத்தேன்.

அங்கே தனித்தனிக்  கொட்டில்களில் நாங்கள் விடப்பட்டோம்.


அங்கே பால்ராஜ் அண்ணையின் தலைமையில் 700 போராளிகளுக்கு அசோகா ஹோட்டல் மாதிரிப் பயிற்சி நடந்து கொண்டேயிருந்தது.  ஏனெனில் யாழ்பாண நகரில் தான் வரதராஜப் பெருமாளின் துணைக் குழுக்களின் முகாம் அமைந்து இருந்த இடம்தான் அசோகா ஹோட்டல். அங்கே ஒட்டுக்குழுக்கள்  பெரிய முகாம் அமைத்து  இருந்தார்கள். அவர்களை அழிப்பதற்கான மாதிரிப் பயிற்சிதான் அது, அந்தப் பயிற்சியில் நாங்களும் இணைக்கப்பட்டோம். அப்பயிற்சிக்கான மெயின் பொறுப்பாளர்களாக பால்ராஜ் அண்ணை மற்றும் பொட்டுஅம்மான் இவர்கள் இருந்தார்கள். ஆசிரியர்களான மேஜர் விவேன் மாஸ்ட்டர் விடுதலைப் புலிகளில் மிகவும் அறிவு கூடியவரும் பொறுப்பாளர்களாலும் போராளிகளாலும் மிகவும் மதிக்கப்படுபவர்.  இவரே அதற்கு தலைமை ஆசிரியராகயிருந்தார்.


 மேஜர் ரெட்டி,. விருந்தன், ஜெனகன் , மேஜர் சங்கர் இவர்கள் பயிற்சியை வழங்கினார்கள்.  இதில் மேஜர் ரெட்டி, மேஜர் விவேகன், மேஐர் சங்கர், மேஐர் அரவிந்தன் அனைவரும் வீச்சாவு அடைந்துள்ளனர். இதில் மேஜர் விவேகன் மிகவும் திறமையானவர் ஆவார். அதே காலப்பகுதியில் இந்திய இரணுவத்திடம் இருந்து எடுத்த காள்கஸ்ரோ உந்துகணை செலுத்தியை அதில் எயாசொட் செற்றிங் உள்ளது என்பதைக் கண்டுபிடித்தவர் அவரே ஆவார். அதை அடுத்து அவ் உந்துகணை செலுத்தியை போராளிகள் ஆகாயத்தில் வெடிக்கக்  கூடியவாறு தாக்குதல் நடத்தி பல சேதங்களை எதிரிக்கு ஏற்படுத்தினார்கள். அதில், ஒரு சிலர் மட்டுமே உயிரோடு உள்ளனர்.

பின்னர் அங்கே என்ன நடந்தது? எனப் போராளி “ஓஸ்க்கார்” குறிப்பிடுகையில்……

அந்த நாட்களில் பல புதிய நண்பர்கள் அறிமுகமானார்கள். அதில் மணிவண்ணன்.


சோ என பலர் நெருங்கிய நண்பர்களாகயிருந்தார்கள்.

“சோ”இவர் யாழ் மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்.  இவர் சுத்தடாங்கியை சண்டையில் இயக்குவதில் மற்றும் குறி தவறாமல் சுடுவதில் மிகவும் திறமையானவர். சிலாவத்துறை மன்னாரில் இரண்டு டோறா படகுகளை எமது டாங்கியால் ஒரே நாள் சுட்டு வீழ்த்தியவர். இவர் அடிக்கடி என்னை டொக்டர் எனஅழைப்பார். 1997ம் ஆண்டுகாலப் பகுதியில்  இவர் ஒரு பெண் போராளியை விரும்பினார்.  ஆனால் அந்தப் பெண் போராளியின் தலைவி இவர்களின் காதலை விரும்பவில்லைை.
 
அதைப்பெண் போராளியான “சோ” அவர்களின் காதலி “சோ”விற்கு தெரியப் படுத்தியுள்ளார்.
இதனால் இருவரும் மனம் உடைந்து தங்களிடம் இருந்த கைக்குண்டை வெடிக்கவைத்து  இருவரும் அவ்விடத்திலே சிதறிச் சாவடைந்தார்கள்.

இப்படியான சம்பவங்கள் எமது  அமைப்பில் பல நடந்துள்ளது.தொடர்ச்சியாக இரவில் மாதிரிப் பயிற்சியில் ஈடுபடுவோம். பகலில் நான் மணிவண்ணன், சந்தோஸ் எனப் பல போராளிகள் சூட்டுப் பயிற்ச்சி எடுப்பதற்காக மூவிங்பஸங்கர் வெட்டும் வேலைகளில் ஈடுபடுவோம். மணிவண்ணன் உயரமானவர். என்ற காரணத்தால் நாங்கள்  வங்கருக்குள் நின்று வெட்டி மண்ணை  மணிவண்ணன் சவளால்  வெளியேற்றுவார்.

  அப்படி அனைத்து வேலைகளிலும் போராளிகளை ஊக்கப்படுத்திச்  செய்வதில் மணிவண்ணன் ஒரு சிறந்த போராளியாக விளங்கினார்.தொடர்ந்து கடுமையாக  நடைபெற்ற அசோகா ஹோட்டல்  மாதிரிப் பயிற்சியில் ஈடுபட்ட போராளிகளில் உயரம் பாயும் ஒரு போராளியும் வெடிமருந்து தவறுதலாக வெடித்து ஆறு போராளிகளும் மொத்தம் ஏழு பேர்படுகாயம் அடைந்தனர்.  இதில் நாலு போராளிகள் வீரச்சாவு அடைந்தனர்.
அக்காலப் பகுதியில் தாஸ் 14 வயது உடைய போராளி என்பவர் நாயாற்றில் 35 வயது பெண்ணோடு தான் உறவு கொண்டதை விசாரனை மூலம் அவர் ஒத்துக் கொண்டதற்கு அமைவாக அவரை கோபுரத்திற்கு மேல் ஏற்றி தான் விட்ட பிழையை 700 போராளிகள் முன்னிலையில் அவர் சொன்னார்.
மேலும் அவர் எங்களிடம் குறிப்பிடும்போது அப்பெண் தன்னிடம் உருளைக் கிழக்கு கேட்டதாகவும்  தான் மூன்று கிலோவிற்கு மேல்கொடுத்ததாகவும் பின்னர் அடுத்த நாள் அப்பெண் வந்து உமக்கு சில விளையாட்டுக்களைக் காட்டுவேன் எனவும் ஆனால் நீ அதை எவரிடமும் சொல்லக் கூடாது எனச் சொல்லி அப்பெண் அந்த வேலையை தனக்குப் பழக்கினார் எனவும்  அவ்வேலை முடிய அவரின் உள் ஆடையை மறந்து விட்டு   போனமையால் தான் எங்களுடைய போராளிகளிடம் தான் பிடிபட்டதாகவும் அவர் எங்களிடம் சொல்லி முடித்தார்.

ஒழுக்கம் என்ற விடயத்தில் விடுதலைப் புலிகள் எவரையும் முகம் பார்த்தது கிடையாது அதனால்தான் எமது தலைவரால் 30 வருடப் போராட்டத்தை திறமையாக நடத்த முடிந்தது.
அதை அடுத்து சா. பொட்டு அவர்கள் எங்களிடம் பேசும் போது ஒரு வருடம் முன்னர் தலைவரின் நம்பிக்கையானவரும் தலைவரின் பாதுகாப்பிற்குப் பொறுப்பாகயிருந்தவரான தியாகு என்பவர் பெண் போராளிகளின் தலைவியான யூலியா என்பவரோடு உறவில் ஈடுபட்டமையால் அப்பெண் இந்தியா அனுப்பப் பட்டபோது அவர் சோதனையிடப்பட்டு மருத்துவர்கள் உறுதிப் படுத்தியமையால் அவ்விடயம் தலைவருக்கு சொல்லப்பட்ட போது அவர் முடிவு எடுக்க கவலையடைந்த காரணத்தால் அவரின் அனுமதியுடன் உடனே மத்திய குழு கூடி அனைவராலும் இருவருக்கும் சாவொறுப்பு வழங்க வேண்டும் எனத்  தீர்மானம் நிறைவேற்றப் பட்டதாகவும்.  அம்முடிவிற்கு  ஏற்ப இருவருக்கும் மரண தண்டனை ங்கப்பட்டதாகவும் எம்மிடம் அவர் குறிப்பிட்டார்



  தியாகு என்பவருக்கு மேஜர் றொபேட் அவர்களால்  சாவொறுப்பு வழங்கப்பட்டது . அதே றோபேட் அவர்களால் திரு. தாஸ் அவர்களிற்கும் மரண தண்டனை வழங்கப்படும் என சா . பொட்டு அவர்கள் அறிவித்தார். அவர் அறிவித்ததும் அனைத்து போராளிகளும் கவலையுடன் காணப் பட்டார்கள். அதையடுத்து அங்கே நின்ற றம்போ  தாஸைக் கூட்டிக்கொண்டு ஒரு மரத்தடியில் இருக்கச் சொல்ல மேஜர் றோபேட் என்பவர் வந்து அவரின் மண்டையில் கைத் துப்பாக்கியால் சுட்டார். பின்னர் நானும் றம்போவும் அவரின் உடலை எரித்தோம் .  அடுத்து போராளிகள் அனைவரும் கவலையில் காணப்பட்டார்கள்.

அக்காலப் பகுதியில் போராளிகள்  மத்தியில் ஒரு குழப்பமான நிலையேற்பட்டது. தற்பொழுது இலங்கை இராணுவத்துடன் இயக்கம் உறவாக உள்ளது. ஆகையால் இந்திய இராணுவமும்  போய்க் கொண்டிருக்கின்றது. அவர்கள் போனால் இனிமேல் சண்டையில்லை அப்படியென்றால் ஏன் நாங்கள் இயக்கத்தில் இருக்க வேண்டும். எனவே தற்பொழுது நாங்கள் வீட்டிற்குப் போவோம் சண்டை ஏற்பட்டால் பிறகு வருவோம் என்ற மனநிலை ஏற்பட்டது. எங்களில் கொட்டிலில் இருந்த அருந்தவம் ஜீவன் உட்பட சுமார் 75 போராளிகள் அப்பொழுது  இருந்த முகாம் பொறுப்பாளர் மேஜர். அரவிந்தன் அவர்களிடம் போய்க் கேட்டார்கள். நாங்கள் வீட்டிற்கு போகப் போகின்றோம்.  சண்டை தொடங்கினால் வருவோம் எனக்  கேட்டுள்ளனர். அவர் தலைவரிடம்  கேட்டு முடிவு சொல்லலாம் எனப் பதில் அளித்தார்.
சரியாக மூன்று நாளையில் தலைவரிடம் கேட்டுத்து முடிவு வந்தது. புதுசாரம் மற்றும் மாட்டின் வெள்ளச் சேட் கொடுத்து உடனே அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்கள்.

ஆனால் அவர்களுக்கு எதுவிதமான அழுத்தங்களோ அல்லது தண்டனைகளோ வழங்கப்பட  வில்லை.  இதைப் பார்த்ததும் தாங்களும் கேட்டிருக்கலாம்  என ஏனைய போராளிகளும் கவலைப் பட்டார்கள். அவர்களை அனுப்பியதும் இதுபற்றி அரவிந்தண்ணை  எங்களோடு கதைக்கும்  போது அவர்களின் முடிவால் தலைவர் கடுமையான கவலையடைந்ததாகவும்,   இனிமேல் இப்படியான முடிவு எவரும் எடுக்க வேண்டாம் என்றும் அப்படி யாராவது எடுத்தால் இரண்டுவருடம் கடுமையான தண்டணைக்குப்  பிறகுதான் வீடு செல்ல அனுமதிக்கப்படுவீர்கள்.
 என்று கடுமையான தொணியில் எங்களிடம் பேசினார்.  அதற்குப்பின் வீடு செல்லும் கனவை அனைத்துப் பேராளிகளும் கை விட்டார்கள். 

உயர்ந்த காடுகளைத் தன்னகத்தே கொண்டே உதயபீடம் மிக அழகாகக்  காணப்பட்டது. அந்தக் காடுகளிற்குள் பல முகாம்கள் இருந்தது.  என்பதை முன்னர்  குறிப்பிட்டுள்ளேன்.  ஆனால் இது தலைவரின் சந்திப்பு இடமாகயிருந்தது.
கிழமையில் ஒரு நாள் மட்டும் அனைத்துப் போராளிகளுக்கும் பாண் கொடுப்பது வழமை. அப்பொழுது நான் , மணிவண்ணன்,  மோகனசுந்தரம்,  சோ எனப் 15 போராளிகள் அமுதகானம் சென்று பாண் எடுப்போம். அங்கே திரு. கடாபி அண்ணையின் அப்பா தான் பேக்கறிப் பொறுப்பாளர்.  அவர்களுக்குக்  கீழே 5 போராளிகள் வெதுப்பக வேலை செய்தார்கள்.
நாங்கள் களைத்து விழுந்து அங்கே போவோம்.  போனதும் தம்பி இருங்கோ எனச் சொல்லி விட்டு தேனீர் பனிஸ் என்பன சாப்பிட  எங்களிற்குத் தருவார். அருமையான மனிதன் யாழ். கரவெட்டி துன்னாலையைப் பிறப்பிடமாகக்  கொண்டே அந்தக் குடும்பத்தில் தகப்பன் சம்பளம் இல்லாத பணியாளராகவும் மகன் ஒரு போராளியாகவும் வாழ்ந்த குடும்பம் அது.


அடுத்து தேனீரைக் குடித்தபின் பாணை இருவர் தடியில் போட்டுபாணைக் காவியவாறு உதயபீடம் வந்து சேருவோம். போராளிகள் அனைவரும் பாணைக்கண்டதும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பார்கள். அடுத்து முதலாவது மாவீரர் நாள் கொண்டாடுவதற்கான வேலைகள் நடந்தது. முகாம் சிவப்பு மஞ்சள்  கொடிகளால் அலங்காரம் செயப்பட்டது. நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் போது அப்பிள்பழம், கேக், என்பன வந்தது.  தொடர்ந்து  27/11/1989 இரவு 12 மணிக்கு மாவீரர் நாள் சிறப்பாக நடைபெற்றது. என்ன நடக்குது என்பது தெரியாத அளவிற்கு கடுமையான நித்திரையாக இருந்தது.
 கேக், தேனீர் என்பன அனைத்துப் போராளிகளிற்கும் வழங்கப்பட்டது. 28 /12/1989 அடுத்த நாள் “அசோகா ஹோட்டல்” மாதிரிப் பயிற்சி நிறைவடைந்தது.வேலைகள் நடந்தது பெரிய கடல் ஆமைகள் உளவு இயந்திரத்தில் பயிற்சி நிறைவிற்கான நாளைக் கொண்டாடுவதற்காக கொண்டு வரப்பட்டது. அது போராளிகளின்  பிரியாவிடைக்காக சமைக்கப்பட்டது. அசோகா ஹோட்டல் மாதிரிப் பயிற்சி நிறைவடைந்தது.


 தொடர்ந்து பிரிகேடியர் சொர்ணம் அண்ணை ஒவ்வொரு போராளியாக வரச்சொல்லி எங்களிடம் சில கேள்விகளைக் கேட்டார். எனது நேரம் வந்ததும் நான் சொர்ணம் அண்ணையிடம் போனேன். முதலில்  எனது வீட்டு நிலவரம் பற்றிக் கேட்டார். இரண்டாவது மாற்று இயக்கங்களோடு எனக்கு அல்லது எனது உறவினர்களிற்கு ஏதாவது தொடர்வபு உள்ளதா? என்று என்னிடம் கேட்டார். நான் இல்லை என்றேன்.  பின் கரும்புலியாகப் போய் இந்தியாவில் தடுப்பில் இருக்கும் போராளிகளை மீட்க வேண்டும் உமக்கு விருப்பமா ? என என்னிடம் கேட்டார். ஆனால் கரும்புலித் தாக்குதல் செய்துதான் அவர்களை வெளியேற்ற வேண்டிவரும் அதில் நீரும் இன்னும் பல போராளிகளும் வீரச்சாவு அடைய வேண்டிவரும் உமக்கு விருப்பமா? என்று என்னிடம் கேட்டார். எப்ப செத்தாலும் சாவு ஒன்றுதான் ஒம் என்று சொன்னேன். அதில்15 போராளிகளை அவர் தேர்ந்தெடுத்தார். 01 சந்தோஸ்,  02 சரவணன் , 03 லெப் கலாதரன், 04  நிமால், 05 , திவாகர், 06 ஜெமிலன், 07  சுடர், 08 றகீம், 09 கப்டன் ,காசன்10 ,கடப்டன் மல்லி கண்ணாளன்11, சலண்ட்ராஜ், 12, ஒஸ்கார், 13, உதயகுமார் 14 கப்டன் மோகனசுந்தரம் இதில் மொத்தம்15 பேர் மற்றவர்களை நான் மறந்து விட்டேன். அதில் சந்தோஸ்  இவ் அணிக்கு பொறுப்பாளராக விடப்பட்டிருந்தார். 
இதில் சந்தோஸ் மாத்தையா அண்ணையின் பிரச்சனையில் இவர் சம்மந்தப்பட்டிருக்கலாம் எனக் கருதி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர் சம்மந்தப்படவில்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்ட போதிலும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டு இயக்கத்தில் இருந்து விலகி வெளிநாட்டில் வாழ்கின்றார்.
இதில் உதயகுமார், நாங்கள் கொக்குவிலில் 9.5 என்ற முகாமில் இருந்த வேளையில் பெண்ணியியல் ரீதியான தொடர்பு ஏற்பட்டது என உறுதிப்படுத்தப் பட்டமையால் இவருக்கு சாவொறுப்பு வழங்கப்பட்டது.  சலன்ட்ராஜ் நாங்கள் 1990 / 8ம் மாதம் கரவெட்டி, நெல்லியடியில் இருந்த வேளை தான் ஒரு ஐயன் எனவும் “இறைச்சி சாப்பிட்டு விட்டேன் கடவுள் என்னை மன்னிக்கமாட்டார்” எனக் கடிதம் எழுதி வைத்து விட்டுக் குப்பி கடித்து அவர் சாவடைந்தார், இதைப் பற்றிப் பின்னர் பார்ப்போம்.   திரு. நிமால் இயக்கத்தில் இருந்து விலகி புதுக்குடியிருப்பில் திருமணம் செய்து இருந்தவேளை நோய் ஏற்பட்டு அங்கே சாவடைந்தார்.  ஏனையவர்கள்  தற்பொழுதும் உயிரோடு உள்ளனர்.

 வீரச்சாவு அடைந்தவர்களை நிலையுடன் அவர்களின் பெயரைப் போட்டுள்ளேன் . எங்களுடையே15  போராளிகளும்  உதயபீடத்தில் விடப்பட்டோம். காரணம் அது தலைவரின் மேற்பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட அணி என்பது  பின்னர்தான் எங்களிற்குத் தெரியும்.  இப்படித்தான் இயக்கத்தின் இரகசியம் பாதுகாக்கப்பட்டது. நாங்கள்  தொடர்ந்து 1990/3 ஆம் மாதம் வரை அங்கே நின்றோம். அங்கு இருந்த காலத்தில்தான்  நான் ஒரு தவறு விட்டேன்.  அக்காலத்தில் விலகி வீடு சென்ற அருந்தவம் தனது இரண்டு குப்பிகளையும் என்னிடம் தந்துவிட்டு அவர் வீடு சென்றார். அவ்வேளை எங்களின் உதயபீடக் கொட்டிலுக்குள்  காட்டெலி ஒன்று வந்து சாக்குக்குள் மறைந்திருந்து 

அதை நான்பிடித்து எடுத்தேன்.  அப்பொழுது எனக்கு ஒரு சிந்தனை ஏற்பட்டது.  அதனால் மருத்துவக் கொட்டிலுக்குப் போய் ஒரு பழைய சிறஞ்சி எனப்படும் ஆட்களிற்கு அடிக்கும் ஊசி ஒன்றைப் எடுத்து வந்தேன். அடுத்து எனது குப்பியை உடைத்து  சிறிதளவு தண்ணீர் கலந்து அச் சிறஞ்சியில் எடுத்து அந்த எலிக்கு அடித்தேன். காரணம்  எத்தனை நிமிடத்தில் அது சாகும் என்பதை அறிந்து கொள்வதற்காகவே அதைச் செய்தேன்.  ஊசி அடித்த உடனும் அது கட்டை அறுத்துக்கொண்டு ஓடி விட்டது.  நான் தேடியும் அதைக் கண்டுபிடிக்க முடியாமல் போய் விட்டது.  ஆனால் நான் அதைப் பெரிது படுத்தவில்லை.  அது போய் சமையல்ப்  பகுதியில் செத்துக் கிடந்தது.  அடுத்த நாள் காலை உளவுப்படை காட்டிற்குள் இறங்கி விட்டதாகவும், நஞ்சுகளை அவர்கள் தூவியதால் மிருகங்கள் சாவதாகச் சொல்லி பாரிய தேடுதல் வேட்டை முகாமைச் சுற்றி நடத்தப்பட்டது.

இதை அறிந்த நான் நேராகப் பொறுப்பாளர் மேஐர். அரவிந்தன் அவர்களிடம் நானே அத்தவறை செய்ததாக ஒத்துக் கொண்டேன்.
 அந்த எலி உணவுக்குள் விழுந்திருந்தால் அனைவரும் அல்லவா செத்துயிருப்போம்! எனக்  கடுமையாகப் பேசினார்.  அடுத்து மூன்று நாட்கள் மாற்று இயக்கங்களில்  உனது உறவினர்கள் இருக்கின்றார்களா? எனக் கடுமையான விசாரணை நடைபெற்றது. தாஸை அடுத்து எனக்குத்தான் சாவொறுப்பு என நினைத்துக் கொண்டேன். அவர்கள் கடுமையாகப் பயந்து விட்டதை நான் அறிந்துகொண்டேன். அடுத்து பாதுகாப்பு அணியில் இருந்து என்னை வெளியேற்றுவார்கள்  என நினைத்தேன்.  எதையும் அவர்கள் செய்யவில்லை இனிமேல் இப்படி செய்ய வேண்டாம் என ஆலோசணை  வழங்கினார்கள். அன்றிலிருந்து அங்கே நின்ற போராளிகள் “எலிடொக்டர்” என என்னை அழைத்தார்கள்.

அடுத்து பால்ராஜ் அண்ணையின் செயல்பாடுபற்றிப்பார்

Share:
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments