கனடாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த யுவதி ஒருவர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் கடந்த ஐந்தாம் திகதி இடம்பெற்றுள்ளது.

கனடாவின் ஸ்காபரோவைச் சேர்ந்த சத்தீஸ்வரன் சயினகா என்ற 22 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழில் நேர்ந்த சோகம் ; கனடாவிலிருந்து வந்த 22 வயது யுவதிக்கு நேர்ந்த கதி | Fate 22 Year Old Woman Who Came Jaffna From Canada

கனடாவில் வாழ்ந்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த குறித்த யுவதி சுற்றுலாவுக்காக யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார்.

இவர், வடமராட்சி – கல்லுவம் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், குறித்த யுவதி தெல்லிப்பழை புற்றுநோய் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஐந்தாம் திகதி உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதியின் இறுதிக் கிரியைகள் நாளை (08) கல்லுவத்தில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த சிறுமியின் திடீர் மரணத்தால் வடமராட்சி கல்லுவம் பிரதேசம் சோகத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments