அமெரிக்க படையால் கைது செய்யப்பட்டுள்ள வெனிசூல அதிபர் நிகொலஸ் மதுரோவின் தற்போதைய புகைப்படம் ஒன்றை சற்றுமுன் டொனால்ட் ரம்ப் வெளியிட்டுள்ளார்.

நியூயார்க், வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோவை சிறைப்பிடித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

வெனிசுவேலா நாட்டின் தலைநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியையும் அமெரிக்க படைகள் கைது செய்து, நாடுகடத்தியதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

வெனிசுலா அதிபர் மதுரோ கைது விவகாரம் ; ட்ரம்ப் வெளியிட்ட புகைப்படம் வைரல் | Trump S Photo On Maduro S Arrest Goes Viral

வெனிசுவேலாவிருந்து போதைப் பொருள் கடத்தப்படுவதாக ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வந்தநிலையில், வெனிசுவேலா மீது அமெரிக்க படை தாக்குதல் நடத்தியது. மேலும், வெனிசுவேலாவில் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

போதைப் பொருள் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகக் கூறி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த சில மாதங்களாக வெனிசுவேலா அரசுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.

போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து வெனிசுவேலா செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டியதுடன், மதுரோ கடுமையாக விளையாடினால், அதுதான் கடைசி விளையாட்டாக இருக்கும் என்று கிறிஸ்துமஸ் தினத்தன்று ட்ரம்ப் எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments