யாழ் பருத்தித்துறை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவி  மீது கணவர் போத்திலால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக  தெரிவிக்கபப்டுகின்றது. சம்பவம்  தொடர்பில்  சமூக வலைத்தளங்களில்  காணொளி வெளியாகியுள்ளது.

யாழில் பிள்ளையின் கண்முன்னே தாய்க்கு அரங்கேற்றிய கொடூரம்! | Husband Stabs Estranged Wife With Bottle In Jaffna

தாயை காப்பாற்ற  முனைந்த  சிறுவன்

குறித்த நபர், நாகர்கோயில் பகுதியில் வசிக்கும் 46 வயதான மனைவியை கடைக்குள் வைத்து பியர் போத்தலை உடைத்து அவர் மீது 6 முறை குத்தி காயப்படுத்தியுள்ளார்.

சம்பவத்தில்  காயமடைந்த பெண் மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை  சம்பவம்  இடம்பெற்றபோது தாயுடன் வந்திருந்த சிறுவன்  தந்தையின் செயலால் அதிந்திபோதி, தாயை தாக்கவிடது, தந்தையை இழுத்து பிடிப்பதையும்  காணொளியில் அவதானிக முடிகின்றது.

வளரும்  பிள்ளைகளுக்கு  முன்னுதாரணமாக இருக்க வேண்டிய பெற்றோர்கள், பிள்ளைகளின் கண்முன்னே அரங்கேறும் இவ்வாறான  சம்பவங்கள்  குழந்தைகளை மனதளவில் பாதிப்புக்கு  தள்ளிவிடுகின்றது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments