மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குள் இடம்பெறும் மரணச் சடங்கிற்கு வீதியில் வெடிகளை கொழுத்தவேண்டுமாக இருந்தால் சபைக்கு 10 ஆயிரம் ரூபா கட்டணம் செலுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் க.ஜெசீதன் தலைமையில் இடம்பெற்ற நிலையில் இந்த பிரேரணையை தவிசாளர் கொண்டுவந்த நிலையில் அது தீர்மானமாக்கப்பட்டது.

மரணச் சடங்குகள்

தவிசாளர் தனது பிரேரணையில் கருத்து தெரிவிக்கையில்,

மரணச் சடங்குகளின் போது வீதிகளில் வெடி வெடிப்பதால் வீதிகள் அசுத்தமடைகின்றன. அவற்றை பிரதேச சபையே சுத்தம் செய்ய வேண்டிய தேவை உள்ளது. எனவே அந்த குப்பைகளை சுத்தம் செய்வதற்காக நாங்கள் குறித்த வெடிகளை வெடிப்பவர்களிடமிருந்து 10 ஆயிரம் ரூபா கட்டணமாக வசூலிக்க வேண்டும்.

அவர்கள் எமது பிரதேச சபைக்கு 10 ஆயிரம் ரூபா செலுத்தி அனுமதியை பெற்றுக்கொண்ட பின்னரே வெடிகளை வெடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சபையில் நீண்ட விவாதம், கருத்து முரண்பாடுகள் என்பன இடம்பெற்றன.

இதன்போது கருத்துரைத்த இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் ஒருவர் வெடி வெடிப்பது என்பது எமது மரபு. எமது மரபுகளுடனும், மக்களின் உணர்வுகளுடனும் விளையாடாதீர்கள். இந்த விடயத்திற்கு நான் எதிர்ப்பு என்று கூறியதுடன் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

அதன்பின்னர் குறித்த பிரேரணையானது சபையில் நிறைவேற்றப்பட்டது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments