ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியை கொன்ற அமெரிக்காவிற்கு மரண அடி கொடுப்போம் என்று ஈரான் சபாநாயகர் முகமது பாகெர் கலிபாப் (Mohammad Bagher Qalibaf) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தலைவர்களை “மோசமான குற்றவாளிகள்” என்று அழைத்த ஈரான் சபாநாயகர் அவர்களின் இஸ்லாமியக் குடியரசு மீதான தொடர்ச்சியான தாக்குதல்களுக்காக “பேரழிவு தரும் அடிகளை” எதிர்கொள்ள நேரிடும் எனவும் சுட்டிக்காட்டினார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் மீது தாக்குதல்

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “அமெரிக்காவும் இஸ்ரேலும் சிவப்புக்கோட்டைத் தாண்டிவிட்டன, அதற்கான விலையை அவர்கள் கொடுத்தே ஆக வேண்டும்.

அமெரிக்காவிற்கு மரண அடி கொடுப்போம் : ஈரான் சபாநாயகர் எச்சரிக்கை | Iran Speaker Call Us Israel Chiefs Filthy Criminal

கமேனியை கொன்ற அமெரிக்காவிற்கு மரண அடி கொடுப்போம். ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.

இந்தப் போர் ஈரானின் வாழ்வா சாவா என்ற போர் மட்டுமல்ல, இறுதிப் பழிவாங்கலுக்கான போர்.

நெதன்யாகு மற்றும் ட்ரம்ப்பிற்கு நான் சொல்வது இதுதான்; நீங்கள் கெஞ்சும் அளவிற்கு வலிமைமிக்க அடிகளை உங்கள் மீது தொடுப்போம். அதை நீங்கள் விரைவில் காண்பீர்கள்” என கூறினார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments