குவைத்தின் வான் பாதுகாப்புப் படையினரால் அமெரிக்காவின் மூன்று F-15E ஸ்டிரைக் ஈகிள் போர் விமானங்கள் “தவறுதலாகச் சுடப்பட்டு” (Friendly Fire) வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் 01(CENTCOM) தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், அந்த விமானங்களில் இருந்த ஆறு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறியதுடன், அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் ஆரோக்கியத்துடன் உள்ளதாக ‘X’ தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உதவிக்கு வந்த அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்திய குவைத்! | Kuwait Shoots Down Us Plane That Came To Help

இந்தச் சம்பவத்தை குவைட் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், மீட்புப் பணிகளில் குவைட் பாதுகாப்புப் படைகள் வழங்கிய ஒத்துழைப்பிற்கு அமெரிக்கா நன்றியைத் தெரிவித்துக்கொண்டது.

மேலும் குறித்த சம்பவத்துக்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், மேலதிக தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments