ஈரானுக்கு எதிராக நடைபெற்று வரும் இராணுவ நடவடிக்கை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.

ஈரானுக்கு எதிரான இந்த இராணுவ நடவடிக்கை சுமார் 4 முதல் 5 வாரங்கள் வரை நீடிக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தேவையெனில் அதைவிட நீண்ட காலமும் தொடர தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். போர் நீண்டாலும் நான் சலிப்படைய மாட்டேன் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஈரானுடனான போர் எவ்வளவு நாள் நீடிக்கும்? – டிரம்ப் விளக்கம் | Iran War Could Go Longer Than Four Weeks

இந்த போரை தொடங்கியதற்கான முக்கிய காரணமாக ஈரானின் அணு திட்டமே என டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா தலைமையிலான நிர்வாகம் கையெழுத்திட்ட அணு ஒப்பந்தம் ஈரானுக்கு அணு ஆயுதத்தை உருவாக்கும் வாய்ப்பை வழங்கியதாக அவர் குற்றம்சாட்டினார்.

அந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈரான் அணு ஆயுதத்தை சட்டபூர்வமாக பெறும் பாதையில் சென்றது என அவர் தெரிவித்தார். மேலும், ஈரான் வெளிநாடுகளில் ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு வழங்குவதை தடுக்கவே இந்த நடவடிக்கை அவசியமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கில் ஈரான் தாக்குதல்களில் உயிரிழந்த அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு டிரம்ப் அஞ்சலி செலுத்தினார். “நமது வீரர்களின் நினைவாக இந்த நடவடிக்கையை உறுதியுடன் தொடர்வோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானுடனான மோதல் குறுகிய காலத்தில் முடிவடையாது என்றும், தேவையான அளவு வரை தொடரும் என்றும் டிரம்ப் கூறியிருப்பது, இந்த போர் நீண்டகாலத்திற்கு செல்லக்கூடும் என்ற சாத்தியத்தை வெளிப்படுத்துகிறது. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments