யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில் கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி பொலிசார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 17 வயது சிறுவன் அல்ஃபினோ அருள்பாய்ஸ் என்பவரின் குடும்பத்தினர், தங்களிடம் அச்சுறுத்தல்கள் நிலவுவதாகவும், அந்நிலையில் மறைமுகமாக பின் தொடரப்பட்டதாகவும் முறைப்பாடு செய்துள்ளனர்
முறைப்பாட்டின் போது, குடும்பத்தினர் மோட்டார் சைக்கிள்களில் அச்சுறுத்திய நபர்கள் பற்றிய ஒளிப்படங்கள் மற்றும் காணொளி ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளனர்.
மனித உரிமை ஆணைக்குழு யாழ். பிராந்திய அலுவகத்திற்கான அறிக்கையின் பின்னர், த. கனகராஜ், யாழ். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு விசாரணையை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணித்துள்ளார்.
தற்போது, குற்றச்சாட்டுக்குள்ளாகிய பொலிஸ் பிரிவினரே விசாரணை செய்யும் நிலை தொடர்பில், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சட்டத்தரணிகள் யாழ்ப்பாணம் மற்றும் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர்களே விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், உயிரிழந்த சிறுவனின் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றப்புலனாய்வு துறைக்கு மாற்றி நடத்தப்படுவதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
