வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் தொடர் அழுத்தத்தையடுத்து முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பு பிரிவிற்குட்பட்ட வீரசிங்கம் அணைக்கட்டின் கட்டுமானப்பணிகள் முழுமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் இவ்வாறு தமது தொடர்ச்சியான வலியுறுத்தலையடுத்து கட்டுமானப்பணிகள் முழுமைப்படுத்தப்பட்ட வீரசிங்கம் அணைக்கட்டினை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், உலகவங்கியின் நிதி உதவியில் ‘சியாப்’ நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின்கீழ் காணப்படும் வீரசிங்கம், சித்தாறு, சிவசாமி அணைக்கட்டுக்கள் மற்றும் மல்லிகைத்தீவு கமக்கார அமைப்புப் பிரிவிற்குட்பட்ட ஜங்கன் அணைக்கட்டு ஆகிய அணைக்கட்டுக்களை அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

கட்டுமானப் பணி

இதனால் தாம் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் முறையீடு செய்திருந்தனர்.

வீரசிங்கம் அணைக்கட்டின் கட்டுமானப் பணிகள் நிறைவு | Construction Work Of Weerasingham Dam Completed

இந்நிலையில் விவசாயிகளின் முறையீட்டிற்கு அமைவாக குறித்த அணைக்கட்டுக்களை அமைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் கடந்த 27.01.2026இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட கமநல உதவி ஆணையாளரிடம் கேள்வி எழுப்பியதுடதுடன், விரைவாக அணைக்கட்டுக்களின் கட்டுமானப்பணிகளைப் பூர்த்திசெய்யுமாறும் வலியுறுத்தியிருந்தார்.

இத்தகைய சூழலில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது தொடர்ச்சியான வலியுறுத்தலையடுத்து வீரசிங்கம் அணைக்கட்டின் கட்டுமானப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

GalleryGalleryGalleryGallery

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments