சுவிஸ்லாந்திலிருந்து யாழ்ப்பாணம் வந்த 41 வயதான 3 பிள்ளைகளின் தாயார் தற்போது சித்தசுவாதினமற்ற நிலைக்கு சென்றதாக அதிர்ச்சித் தகவல்  வெளியாகியுள்ளது.

யாழ் வலி வடக்கில் அமைந்துள்ள தனது பெற்றோரின் காணியில் வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்காக கடந்த வருட தொடக்கத்தில் குறித்த சுவிஸ் வாழ் குடும்பப் பெண்ணும் கணவனும் யாழ்ப்பாணம் வந்துள்ளார்கள்.

யாழ் வந்து போதைக்கு அடிமையான சுவிஸ் வாழ் தமிழ்ப் பெண்; கண்ணீரில் கணவன் | Swiss Tamil Woman Visits Jaffna Addicted To Drugs

 செவ்விளநீரில் கலந்த போதைப்பொருள் 

வீட்டு அத்திவார வேலைகளை முடித்துக் கொண்டு கணவன் சுவிஸ் சென்றுவிட மனைவி யாழ்ப்பாணத்தில் தனது உறவுகளுடன் நின்று வீடு கட்டும் வேலையை மேற்பார்வை செய்து வந்துள்ளார்.

இந் நிலையில் கடந்த சிவ மாதங்களாக மனைவியின் போக்கில் மாற்றம் ஏற்பட்டதை கணவன் அவதானித்ததுடன் தனது தொலைபேசி அழைப்புக்கும் மனைவி பதிலளிக்க முடியாது இருந்ததையடுத்து மனைவியின் உறவினர்களை தொடர்பு கொண்டுள்ளார்.

அவர்கள் மனைவியின் நிலையை நேரடியாகச் சொல்லாமல் கணவனை யாழ்ப்பாணம் வருமாறு அழைத்துள்ளார்கள். சுவிஸ்லாந்திலிருந்து வந்த கணவன் தனது மனைவியில் நிலைகண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஏனெனில் மனைவி அரை குறை சித்தசுவாதினமுடையவராக மாறியுள்ளதை அவதானித்துள்ளார். இதனையடுத்து நண்பன் ஒருவனின் ஆலோசனையில் மனநலம் சார்ந்த வைத்தியர் ஒருவரிடம் மனைவியைக் காட்டிய போதே குறித்த பெண் ஐஸ் போதைக்கு அடிமையாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

அதன் பின்ன கணவன் மற்றும் உறவுகள் மேற்கொண்ட விசாரணைகயில், வீடு நிர்மானப் பணிகளின் போது அங்கு வேலை செய்ய வந்த கட்டடத்தொழிலாளிகள் மூலமாக மனைவி ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையானது கண்டு பிடித்துள்ளார்கள்.

அதுமட்டுமல்லாது பெண்ணின் நகைகள் மற்றும் பணம், பெறுமதி மிக்க கைத்தொலைபேசி போன்றவை மீட்க முற்பட்ட போது மனைவியின் காணொளிகளை காட்டி கணவனை அச்சுறுத்தியதாகவும் தெரியவருகின்றது.

கட்டடத் தொழில் செய்தவர்கள் சுவிஸ் வாழ் பெண்ணுக்கு செவ்விளநீரில் போதைப்பொருளைக் கொடுத்து  சித்தசுவாதினமடையச் செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தற்போது மனைவியை கணவன் தனது நாட்டுக்கு கொண்டு சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments