ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கண்ணிவெடிகளைப் பதிக்க முயற்சிக்கும் சிறிய அல்லது பெரிய அளவிலான எந்தவொரு படகுகளையும் சுட்டு வீழ்த்தி அழிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டு கடற்படைக்கு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப்,

அமெரிக்க கடற்படைக்கு ட்ரம்பின் கடும் உத்தரவு ; ஹோர்முஸ் நீரிணையில் படகுகளுக்கு காத்திருக்கும் ஆபத்து | Trump Orders To Shoot Down Boats In Hormuz Strait

கண்ணிவெடிகள்

குறித்த பகுதியில் கண்ணிவெடிகளை வைக்கும் எந்தவொரு படகைக் கண்டாலும் எவ்வித தயக்கமுமின்றி தாக்குதல் நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, கடல் மார்க்கத்தில் கண்ணிவெடிகளைப் பதிக்கும் சிறிய படகுகளாக இருந்தாலும் அவற்றை அழிப்பதற்கு அமெரிக்க கடற்படைக்கு முழு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர் தரப்பினரின் (ஈரான் உள்ளிட்ட நட்பு நாடுகள்) சுமார் 159 கடற்படைக் கப்பல்கள் ஏற்கனவே கடல் மட்டத்திற்கு அடியில் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments