யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

திருநகர் பகுதியை சேர்ந்த செல்வம் றொபின் (வயது 43) என்பவரே உயிரிழந்தவராவார்.

யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில், சாவகச்சேரி காவல்நிலையத்தை அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிளிலும் கனரக வாகனமும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணை

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சாவகச்சேரி காவல்துறையினர், கனரக வாகன சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் விபத்து : சம்பவ இடத்தில் பலியான குடும்பஸ்தர் | Family Of Accident Victim In Jaffna
Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments