ஹோர்முஸ் நீரிணை வழியான தாக்குதல்களைப் புதுப்பிக்க வேண்டாம் ஈரான் ஆயுதப் படைகள் அமெரிக்காவை எச்சரித்துள்ளன.

வர்த்தகப் பாதையின் மீதான தனது கட்டுப்பாட்டைத் தொடரப்போவதாக அமெரிக்கா உறுதியளித்த நிலையில் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்,

அமெரிக்க இராணுவம் 

“ஆக்கிரமிப்பு, அமெரிக்க இராணுவம் இப்பகுதியில் தனது முற்றுகை, கொள்ளை மற்றும் கடற்கொள்ளையைத் தொடர்ந்தால், ஈரானின் சக்திவாய்ந்த ஆயுதப் படைகளிடமிருந்து ஒரு பதிலடியை அவர்கள் நிச்சயம் எதிர்கொள்வார்கள்.

மேலும் மற்றுமொரு ஆக்கிரமிப்பு ஏற்பட்டால், அமெரிக்க – சியோனிச எதிரிகளுக்கு மேலும் கடுமையான சேதங்களை ஏற்படுத்த நாங்கள் தயாராகவும் உறுதியாகவும் இருக்கிறோம்.

அதே நேரத்தில், பிராந்தியத்தில் அவர்களின் நடத்தை மற்றும் நடமாட்டங்களைக் கண்காணித்து, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் பகுதியை தொடர்ந்து நிர்வகித்து கட்டுப்படுத்துவோம்.  என்று ஈரானிய ஆயுதப் படைகளின் கதம் அல்-அன்பியா தலைமையகம் தெரிவித்துள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments