அம்பாறை – மங்களகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஹொம்பகஸ்தலாவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் வயோதிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்

இந்த சம்பவம் நேற்று(25.4.2026) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொஹொம்பகஸ்தலாவ பகுதியைச் சேர்ந்த குறித்த வயோதிபர், தனது வீட்டுக்கு அருகில் வந்த காட்டு யானையை விரட்டுவதற்கு முயற்சி செய்துள்ளார்.

மேலதிக விசாரணை

இதன்போது ஆவேசமடைந்த யானை அவரைத் தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அம்பாறையில் காட்டு யானை தாக்கி வயோதிபர் உயிரிழப்பு! | Wild Elephant Attack In Ampara Elderly Man Dies

இந்தச் சம்பவம் குறித்து மங்களகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் காட்டு யானைகளின் ஊடுருவல் அதிகரித்து வருவதால், கிராம மக்கள் அச்சத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments