பொதுவாகவே நமது ஆழ்மன எண்ணங்களுக்கும் கனவுகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக அறிவியல் கருத்துக்கள் காணப்படுகின்றது. இருப்பினும் கனவுகள் குறித்து இன்றளவும் நிரூபிக்கபட்ட ஆய்வுகள் கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனால் கனவு சாஸ்திரத்தின் பிரகாரம் கனவுகள் எதிர்காலத்தி்ல் நடக்கவிருக்கும் விடயங்களை முன்கூட்டியே எச்சரிக்கும் ஒரு எச்சரிக்கை மணிபோன்றது.
உண்மையில் நாம் கனவில் காணும் விடயங்கள் அப்படியே நிஜத்தில் நடக்கும் என்று அர்த்தம் கிடையாது. அதற்கான பலன்கள் மாத்திரமே நடக்கும் என கனவு சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்த வகையில் கடவுள் பற்றிய கனவுகள் சாஸ்திரங்களின் அடிப்படையிலும், கனவு அறிவியலின் அடிப்படையிலும் மிகவும் மங்களகரமாகதாக பார்க்கப்படுகின்றது.

எனவே கனவுகளில் எந்த கடவுளின் உருவங்கள் அல்லது சின்னங்கள் வந்தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவின் வாயிலாக அறிந்துக்கொள்ளலாம்.
கடவுள் பற்றிய கனவின் பலன்கள்

கனவில் சிவன் வந்தால் நம் வாழ்வில் நமக்கான அங்கிகாரம் விரைவில் கிடைக்கப்போகின்றது என்று அர்த்தம். சிவலிங்கத்தின் தோற்றம் கனவில் வந்தால், வாழ்க்கையில் இதுவரையில் சந்தித்த மொத்த பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கப்போகின்றது என அர்த்தம். சிவன் பற்றிய கனவுகள் பணம் மற்றும் செல்வாக்கை அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

அது போல் கனவவில் முருக பெருமான் வந்தால் நாம் நினைத்த காரியம் கைகூடும் என்று நம்பப்படுகின்றது. சகல ஐஸ்வர்யங்களும் எதிர்பாராத அதிர்ஷ்டமும் கிடைக்கப்போகின்றது என்று அர்த்தம்.
முருகன் கனவில் வந்தால் நடப்பவை அனைத்தும் நன்மையில் முடியும். உங்கள் ஜாதகத்தில் ஏற்பட்டுள்ள தோஷங்கள் நிவர்தியாகும் என்று பொருள்.இது நல்ல மாற்றத்துக்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகின்றது.

கனவில் விநாயகர் வந்தால் நாம் புதிதாக தொடங்கும் வேலைகள் எந்தவித தடைகளும் இன்றி மிகவும் சிறப்பாக நடைபொறும் என்று அர்தம். வாழ்வில் புதிய அத்தியாயம் ஆரம்பிக்கப்போவதன் அறிகுறியாகவும் கருதப்படுகின்றது.

அது போல் கனவில் விஷ்ணு பகவான் வந்தால் வாழ்வில் செல்வ செழிப்பு அதிகரிக்கப்போகின்றது என்றே அர்த்தம். அம்பாள் அல்லது ஏதேனும் பெண் தெய்வங்கள் கனவில் வந்தால், வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறப்போகின்றது என்று அர்த்தம்.
மேலும் குலதெய்வம் பற்றிய கனவுகள் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதாகவே பார்க்கப்படுகின்றது. மொத்தத்தில் கடவுள் பற்றிய கனவுகள் மிகவும் மங்களகரமானதாகவும், வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)
