தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ; படுதோல்வியை சந்தித்த சீமான்2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாம் தமிழர் கட்சிக்கும் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் மிகப்பெரிய அரசியல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன

குறிப்பாக, காரைக்குடி தொகுதியின் வாக்கு விபரங்களை ஆராயும்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சி எந்தளவிற்கு மற்ற கட்சிகளை பாதித்துள்ளது என்பது தெளிவாகிறது. இத்தொகுதியில் தவெக வேட்பாளர் பிரபு 34,782 வாக்குகள் பெற்று முதலிடத்தில் மாஸ் காட்டியுள்ளார்.

வெறும் 7,625 வாக்கு – 4-வது இடத்திற்கு தள்ளப்பட்ட சீமான்

அவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி 19,614 வாக்குகளுடனும், அமமுக-வின் தேர்போகி பாண்டி 8,920 வாக்குகளுடனும் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களம் கண்ட சீமான் வெறும் 7,625 வாக்குகளை மட்டுமே பெற்று 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

தவெக வேட்பாளர் பிரபு வாங்கிய வாக்குகளில் நான்கில் ஒரு பகுதியை கூட சீமானால் நெருங்க முடியவில்லை என்பது அவரது ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments