ஈரான் துறைமுகங்களுக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் கப்பல்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகையை எவரும் சவால் செய்ய முடியாது என்று அந்நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த முற்றுகையானது மிகவும் வலுவானது என்றும், இதனை எவராலும் எதிர்க்க முடியாது என்றும் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈரான் மீது அமெரிக்கா தொடர்ச்சியான அழுத்தங்களை பிரயோகித்து வரும் நிலையில், ஈரானியர்கள் பகிரங்கமாக முரணான கருத்துக்களை வெளியிட்டாலும், அவர்கள் உண்மையில் ஒரு உடன்படிக்கையை செய்துகொள்ளவே விரும்புவதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் நிதி அமைப்பு

இராணுவ பலம் முற்றாக சிதைந்துள்ள நிலையில், ஒரு உடன்படிக்கையை செய்துகொள்ளவே அவர்கள் விரும்புவார்கள் என்று சுட்டிக்காட்டிய ட்ரம்ப், ஈரானின் நிதி அமைப்பைத் தமது நாடு தோல்வியடையச் செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

தாம் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் ஈரானின் நிதி அமைப்பு வீழ்ச்சியடைய வேண்டும் என்று தான் விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments