கொழும்பு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக தற்போது எந்தவித உறுதியான கருத்தையும் வெளியிட முடியாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

மரணப் பரிசோதனை அறிக்கை வெளியாகிய பின்னரே சம்பவம் குறித்து தெளிவான தகவல்களை வெளியிட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், “கபில சந்திரசேனவின் மரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மரணப் பரிசோதனை அறிக்கை

தற்போது மரணப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. அதன் பின்னர் சட்ட வைத்திய அதிகாரிகள் உண்மைகளை தெளிவுபடுத்துவார்கள்.

பொலிஸார் அனைத்து கோணங்களிலும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்,” என்றார்.

இதன்போது, “நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டபோதே அவரைக் கைது செய்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது அல்லவா?” என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், “பொலிஸார் இது தொடர்பில் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருந்தனர். நேற்றைய தினத்தின் பின்னரே இந்த விடயம் அவர்களுக்கு தெரியவந்தது.

இரவுக்குள் இவ்வாறான சம்பவம் நடைபெறும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மறுநாள் காலையில் கைது செய்ய திட்டமிட்டிருக்கலாம்,” என்று கூறினார்.

மேலும், “அவர் ஏற்கனவே பொலிஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தவர். நீதிமன்ற உத்தரவுகளும் இருந்தன. இதுகுறித்து மேலதிக தகவல்களுக்கு பொலிஸ் மா அதிபரிடம் கேட்க வேண்டும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, மரணப் பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே சம்பவத்தின் உண்மை நிலை குறித்து அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்க முடியும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால வலியுறுத்தினார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments