தமிழீழத்தின் இறைமையை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பொன்விழாவையும் (14.05.1976 – 14.05.2026) இணைத்து இந்த நிகழ்வு உணர்வுப்பூர்வமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
அனைவருக்குமான பொதுச்சுடர் ஏற்றலுடன் 18.30 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமானது. தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் -சுவிஸ் கிளை நிர்வாகப் பொறுப்பாளரும், மூத்த உறுப்பினருமான திரு. நசீர் அவர்கள் தமிழீழத் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்.
மாவீரர்களுக்கான ஈகச்சுடர் ஏற்றலுடன், 28.04.2026 இல் மறைந்த ‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா அவர்களுக்கான நினைவுச்சுடரும் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து மாவீர்களுக்கான மலர்மாலை அணிவிக்கப்பட்டு,
‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா அவர்களுக்கான மலர்மாலை அணிவிக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் 50 ஆண்டு கால வரலாற்றைப் பறைசாற்றும் வகையில், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் வரிகளில், கலைமாமணி T.L. மகாராஜன் மற்றும் திருமதி. பிரியா பிரகாஷ் பாடிய மூன்று சிறப்புப் பாடல்கள் அடங்கிய ‘நினைவகக் குச்சி’ (விரலி Flash Drive) ‘பொற்காலம் 50’
வெளியிட்டு வைக்கப்பட்டது.
“தமிழீழ விடுதலைப் புலிகள் பொற்காலம் 50” பேரெழுச்சி வரலாற்று ஆவணப்பட உருவாக்கம் பற்றி
சுவிஸ் கிளை அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு. குரு விளக்கியதுடன், தமிழீழத் தேசியத் தலைவரின் இருப்பையும் இன்றைய அரசியல் சூழலையும் விபரித்தார். தொடர்து “பொற்காலம் 50” திரையிடப்பட்டது.
தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பம் மற்றும் எழுச்சி நடனங்கள் இளையோர்களால் மேடையேற்றப்பட்டன. பாடலுடன் பேச்சு, கவிதை,
நினைவுரையும் இடம் பெற்றது.
“நம்புங்கள் தமிழீழம்…” பாடல் ஒலிக்கப்பட்டு, கூடியிருந்த மக்கள் அனைவரும் உணர்வுடன் இணைந்து பாடினர்.
தமிழீழத் தேசியக்கொடி கையேற்றலுடன் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தமிழர்களின் தாரக மந்திரத்துடன், அனைவரும் உறுதி ஏற்று நிறைவுற்றது.
“காலம் உணர்ந்து தலைமைக்கும், இயக்கத்துக்கும் உறுதுணையாய் இருப்பவர்களை நாம் மறவோம்.”
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.
