c 972-இலங்கையில் நடப்பது என்ன மக்களே விளிப்பாகயிருங்கள்,புத்தளத்தில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் சடலமாக மீட்பு! பொலிஸார் விசாரணைபுத்தளம் மாவட்டம், உடப்பு – பூனபிட்டிய களப்பிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று(13.5.2026) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பூனபிட்டிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி இளைஞர் வழமை போன்று மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பூனபிட்டிய களப்புக்குச் சென்றிருந்த நிலையிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

தீவிர விசாரணை

நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில் தேடியபோது, களப்புப் பகுதியில் அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடப்பு பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சடலத்தை மீட்டுள்ளனர்.

மரணத்துக்கான காரணம் நீரில் மூழ்கியதா அல்லது வேறு ஏதேனும் அசம்பாவிதங்களா என்பது குறித்து உடப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments