அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் பிரிவின் (U.S. Border Patrol) தலைமை அதிகாரி மைக்கேல் பேங்க்ஸ் வியாழக்கிழமை திடீரென தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகத்தில் குடிவரவுத் துறை சார்ந்த உயர்மட்ட அதிகாரிகள் அண்மைக்காலமாக விலகி வரும் நிலையில், இந்த பதவி விலகலும் இடம்பெற்றுள்ளது.

சுமார் இரண்டு தசாப்தங்களாக எல்லைப் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய பேங்க்ஸ், 2025 ஜனவரியில் ட்ரம்ப் நிர்வாகத்தால் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

சட்டவிரோத எல்லைக் கடப்பு

இவரது பதவி விலகலுக்கான காரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், கடந்த மார்ச் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் உள்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோம் உடன் இவர் நெருக்கமாகச் செயற்பட்டவர் எனக் கூறப்படுகிறது.

திடீரென பதவி விலகிய அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் பிரிவின் தலைமை அதிகாரி! | Us Border Patrol Chief Resigned

Image Credit: CNN

ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு, சட்டவிரோத எல்லைக் கடப்புகளைக் கட்டுப்படுத்துவதில் கடும் விதிகளை நடைமுறைப்படுத்தியுள்ளார்.

பேங்க்ஸின் விலகல் 

பேங்க்ஸின் பதவிக்காலத்தில் எல்லையில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருந்ததுடன், அமெரிக்காவின் எல்லை வரலாற்றிலேயே மிகவும் பாதுகாப்பான ஒன்றாக மாற்றப்பட்டதாக உயர் அதிகாரிகள் அவரைப் பாராட்டியுள்ளனர்.

திடீரென பதவி விலகிய அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் பிரிவின் தலைமை அதிகாரி! | Us Border Patrol Chief Resigned

Image Credit: PBS

இருப்பினும், பாரிய நாடு கடத்தல் நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் எல்லைப் பாதுகாப்பு முகவர்கள் மேற்கொண்ட ஆக்ரோஷமான நடவடிக்கைகள் காரணமாக விமர்சனங்களும் எழுந்தாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஜனாதிபதி ட்ரம்ப்பின் குடிவரவு கொள்கைகளுக்கான மக்கள் ஆதரவு குறைந்து வரும் சூழலில், மைக்கேல் பேங்க்ஸின் இந்த விலகல் முக்கியத்துவம் பெறுவதாக கூறப்படுகிறது.  

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments