நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தான்  விலகும் போது, தனக்கு பதிலாக சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் பதவியேற்பார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர், 

நிலையியல் கட்டளை

“நிலையியல் கட்டளையின் படி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வரும் விருந்தினர்களை வைத்திருக்க வேண்டிய இடம் தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டியவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

தனது வலதுபக்கத்தில் அமர்ந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தன்னுடன் வருகைத் தந்த தங்கை சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரனை கேவலமான முறையில் அவமதித்துச் சென்றிருக்கின்றார்.

அடுத்த மூன்று மாதங்களின் பின்னர் நான் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகும்போது, எனக்கு அடுத்து நாடாளுமன்ற உறுப்பினராக கௌசல்யா அந்த பதவிக்கு வரப் போகின்றார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்டபலத்தை விட அதிகூடிய வாக்குகளைப் பெற்றவர் சட்டத்தரணி கௌசல்யா.

அவரை, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் இன்று வாசிகசாலையில் வைத்து மிகவும் மோசமான முறையில் அவமதித்துச் சென்றிருக்கின்றார்” என கூறியுள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments