யாழில் வீடு புகுந்து திருடர்கள் கைவரிசை! தங்க ஆபரணத்துடன் பல பொருட்கள் கொள்ளைவட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை சின்னம்மா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், வீட்டில் உள்ளவர்கள் மகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக நேற்றுமுன்தினம்(26) காலை வீட்டிலிருந்து கொழும்பிற்கு சென்றுள்ளனர்.
இதன்போது வீட்டை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள் மிளகாய் தூள், சரக்குத்தூள், பயிற்றம் உருண்டைகள், மூன்று கோழிகள், கால் பவுண் தோடு, ஒரு மூக்குத்தி, ஒரு தொகை பணம் மற்றும் பித்தளை அட்டியல் போன்றவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
காவல்நிலையத்தில் முறைப்பாடு
இந்நிலையில் கொழும்பு சென்றவர்கள் நேற்று(27) மாலை வீட்டிற்கு வந்து பார்த்தவேளை வீடு உடைக்கப்பட்டு மேற்படி பொருட்கள் களவாடப்பட்டு இருந்ததை அவதானித்துள்ளனர்.

Advertisement
இது குறித்து வட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதையடுத்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



