ஈரான் நாட்டுடன் ஒரு “மிகச் சிறந்த” உடன்படிக்கையை எட்டுவதற்கு மிக நெருக்கமாக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த உடன்படிக்கையை அவசரமாக செய்து முடிப்பதில் தமக்கு எந்தவித அவசரமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற உயர்மட்டக் கூட்டம் ஒன்றில், இந்த உடன்படிக்கையில் பல திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ட்ரம்ப் கோரியுள்ளதாக அமெரிக்க ஊடகமான Axios செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து பாக்ஸ் நியூஸ் (Fox News) ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் கருத்துத் தெரிவித்துள்ள டொனால்ட் ட்ரம்ப், “நாம் நினைப்பதை மெதுவாகப் பெற்று வருகிறோம்.
