சற்று முன்னர் கொழும்பில் கோர விபத்து.. வெசாக் தானசாலை நிகழ்வில் ஆறு பேர் பரிதாப மரணம்மீகோட பகுதியில் வெசாக் தானசாலையில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் மீது கார் ஒன்று மோதியதில், மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

விபத்தில் காயமடைந்த மேலும் ஆறு பேர் சிகிச்சைக்காக ஹோமகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தப்பியோடிய சாரதி 

ஹோமகம –  மீகோட பகுதியில் உள்ள ஒரு சாலையில், கோவிலில் வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது வாடகைக் கார் ஒன்று மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

சற்று முன்னர் கொழும்பில் கோர விபத்து.. வெசாக் தானசாலை நிகழ்வில் ஆறு பேர் பரிதாப மரணம் | Accident In Meegoda Vesak Dansal 6 Dead

இதன்போது காயமடைந்த 12 பேர் சிகிச்சைக்காக ஹோமகம ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், விபத்தினை ஏற்படுத்திய வாடகைக் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றதுதிட்டமிட்ட சதியா அல்லது விபத்தா உறுதிப்படுத்த முடியவில்லை,

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments