மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்பட்ட கருணா குழுவின் முக்கிய பங்காற்றிய தமிழனின் படுகொலை எப்படியான தாக்கங்களை ஏற்படுத்தியது என்பது பற்றி நிச்சயம் அறிந்திருக்க முடியாது.

இலங்கை அரசாங்கத்தின் குற்றபுலனாய்வுத் துறையுடன் இணைந்து “மாறன்” என்ற பெயருடன் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்து வந்தவர் தான் சச்சி மாஸ்டர் என அழைக்கப்படும் கணபதிபிள்ளை மகேந்திரன்.

கருணா குழுவின் முக்கியஸ்தராக கருதப்படும் சச்சி மாஸ்டரை வைத்து மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் குறித்து அப்போதைய செய்தித்தாள் செய்திகளை வழங்கி வந்தாலும், இவரின் படுகொலை பலரை வியக்க வைத்துள்ளது என்றும் கூறலாம்.

விடுதலைப் புலிகளுடன் எந்தவித இணைப்பும் இல்லாமல் சாதாரண திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்த மகேந்திரன் புவிதரன் என்ற இளைஞரே இந்த கொலையை தைரியமாக செய்து, தமிழர்களின் படுகொலையை தடுத்து நிறுத்தியிருந்தார்.

சாதாரண ஒரு இளைஞர், சச்சி மாஸ்டரை கொலைச் செய்வதற்கு என்ன காரணம்? எப்படி சிறைக்குள் துப்பாக்கி கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பில் ஐ.பி.சி தமிழின் உண்மைகள் நிகழ்ச்சி விரிவாக உங்களுக்கு கொண்டு வந்துள்ளது, 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments