தமிழர்களை ஒடுக்கும் PTA…! ராப் பாடகர் சங்கீர்த்ஷன் கைதுக்குப் பின்னால் இருக்கும் அரசியல்
இலங்கையில் 1979 ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA), இன்றுவரை சிவில் சமூகத்தினர், அரசியல் ஆர்வலர்கள் மற்றும் சிறுபான்மையினரை ஒடுக்குவதற்குக் கையாளப்படும் ஒரு பிரதான ஆயுதமாகத் தொடர்ந்து நீடிக்கிறது.
இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் முறையான நீதிமன்ற விசாரணையின்றி பல மாதங்கள் தடுத்து வைக்கப்படுவதுடன் அவர்களுக்குப் பிணை பெறுவதும் மிகக் கடினமான ஒன்றாகக் காணப்படுகிறது. தொடர்ந்து தமிமீழத்திலும் வெளிநாடுகளிலும் தமிழர்களின் பாரிய ஆற்பாட்டங்களை தொடர்ந்து அரசாங்கம் அவரைப்பிணையில் விடுதலை செய்துள்ளது


