இந்தி சின்னத் திரையிம் மிகவும் பிரபலமான  22 வயதான இளம்  நடிகை சஞ்சிதா உகலே, தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சஞ்சிதா , நேற்று (14) மாலை தனது படுக்கை அறையில் சேலையால் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

22 வயதான பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை; அதிர்ச்சியில் ரசிகர்கள் | Tv Actress Sanchita Ugale Commits Suicide Mumbai

 ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சி

மும்பை நாலாசோபரா கிழக்கு பகுதியில் உள்ள சாய் சந்தோஷி கட்டிடத்தில் நடிகை சஞ்சிதா உகலே வசித்து வந்தாக கூறப்படுகின்றது. உடனடியாக அவரது குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் அவரை மீட்டு வசாய் – விரார் நகராட்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பொலிஸார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.

தற்கொலைக்கான துல்லியமான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நடிகையின் மரணம் இந்தி சின்னத்திரை உலகினரிடமும் அவரது ரசிகர்களிடமும் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.   

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments